பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் திருப்பதிகம் 319 துக்கம்; சூடு-குளிர்ச்சி; நன்மை-தீமை; ஒளி-இருள்; போன்ற இரட்டைகளிலிருந்து ஒன்றைப் பிரித்தல் கடினம். உலகமும், உலகில் உள்ள பொருட்களும் இந்த இரட்டை வடிவுடன்தான் உள்ளன. - இறைவனின் திருவருள் இந்த இரட்ட்ை வடிவம் இல்லாத ஒன்று. அவன் எப்படி ஏகனோ அது போல அவன் திருவருளும் ஏகம்தான். இதனை அறிவுறுத்தற் காகவே தீதிலா நன்மைத் திருவருட் குன்றே என்றார். நான்காவது அடி திருப்பெருந்துறை நாடகத்தின் முடிவுபற்றியதாகும். இந்த முடிவை எவ்வளவு முயன்றும் அடிகளாரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. வழியோடு போன தம்மை இழுத்துப் பிடித்து அருள்புரிந்து ஆனந்தக்கடலில் அமிழ்த்திய குருவானவர், திடீரென்று ஏன் மறையவேண்டும்? தம்மிடத்தில் என்ன தவற்றைக் கண்டார்? எவ்வளவு சிந்தித்தும் விடை தெரியாத காரணத்தால் 'என்னை இவ்வாறு விட்டுச் செல்வது உனக்கே நியாயமா?’ என்ற கருத்தில் பின் வருமாறு பேசுகிறார்!. ஐயா! பார் முதல் அண்டமாய் விரிந்து நிற்கும் நீ மானுட வடிவுடன் திருப்பெருந்துறையில் எழுந்தருளி, நின் இணை அடியை எனக்குத் தந்து, என்னை ஆட்கொண்டபின் (என்னை உடனழைத்து செல்லாமல்) நீ மட்டும் போவது நியாயமோ? சொல்வாயாக என்று கூறுகிறார். '(நான்) போவது ஒர் வகை யாது? நீ எனக்கு அருளாய் என்ற முறையில் கொண்டுகட்டுச் செய்வது மற்றொரு பொருளைத் தரும். ‘ஐயனே! நீ மறையும்பொழுது உன்னோடு வராமலும் இந்த உலக வாழ்க்கையில் முன்போலக் கலந்து வாழமுடியாமலும் இரண்டுங் கெட்ட நிலையில் உள்ளேன். எந்த வகையில்