பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 போகவேண்டும் என்பதை முடிவுசெய்யும் ஆற்றல் என்பால் இல்லை. நீயும் உன் அடியார்களும் இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துக்கொள்ள விரும்பா விட்டாலும், இரண்டும் கெட்ட நிலையிலுள்ள என்பால் இரங்கி "இந்த வழியே செல்” என்று சொல்லி உதவக்கூடாதா?’ என்றவாறு. 397. தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை சங்கரா ஆர் கொலோ சதுரர் அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்பால் சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை உறை சிவனே எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஒர் கைம்மாறே 10 உன்தன்னை - முற்றறிவும், முற்றுத்தொழிலும், இயல்பாகவே பாசநீக்கமும் பெற்ற தேவரீரை. கொண்டது என்றது - இறைவன் தான் ஒத்த நிலையில் இறங்கிவரினும், ஆன்மகுணம் போகாமையின். என் தன்மை - ஆன்மவியல்பு முழுதும் வாய்ந்த இழிந்த என்னை. சதுரர் - சமர்த்தர். அந்தம் - இறுதி. இப்பாடலில் ஒரு வாணிகம்பற்றிப் பேசுகிறார், அடிகளார். வாணிகத்தின் அடிப்படை என்ன? ஒத்த மதிப்புடைய இரண்டு பொருள்களை இருவர் மாற்றிக் கொள்வதே வாணிகம் அல்லது வியாபாரம் எனப்படும். ஒரு பொருளுக்கு விலை நூறு ரூபாய் என்றால் நூறு ரூபாய்க்குள்ள மதிப்பு அந்தப் பொருளுக்கு இருத்தல் வேண்டும். ஒரோவழி நூறுருபாய் நோட்டை வாங்கிப் போட்டுப் பொருளை விற்றுவிட்டவர் ஏமாந்துபோவதும் உண்டு, காரணம் அந்த நூறு ரூபாய் நோட்டுப் போலி நோட்டாகும்.