பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 பாடலின் தொடக்கத்தில் தந்தது உன்தன்னை என்கிறாரே அப்படித் தன்னையே தந்தவன் இவருள் எங்கே புகுந்தான்? மணிவாசகர் என்ற மனிதருக்கு ஆணிவேராய் நிற்பது அவருடைய சித்தம் அல்லவா? அந்தச் சிந்தையில் அவன் குடிபுகுந்துவிட்டான் என்பதைச் 'சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்' என்ற தொடரில் குறிப்பிடுகிறார். 'கரணங்களெல்லாம் கடந்து நின்ற கறைமிடற்றான்' (223) என்றும், 'கனவேயும் தேவர்கள் காண்பரிய கனை கழலோன் (224 என்றும், பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்; போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே (164) என்றும் இறைவனின் இறப்ப உயர்ந்த இலக்கணத்தைப் பலபடியாகப் பாடியுள்ளார். இப்பொழுது ஈசா (என்) உடலிடங் கொண்டாய்' என்று பாடுவது அவனது இறப்ப எளிவந்த தன்மையைக் கூறுவதாகும். @ ওঁ6 &O