பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இத்தலைப்புகளின்கீழ் வரும் அத்தனைப் பாடல்களிலும் இத்தலைப்புத் தொடர்கள் இடம் பெற்றுள்ளன. ஈடு இணையற்றதாகிய திருவாசகத்தில் இத்தலைப்புகள் இடம் பெற்றிருந்தும் பின்னர் வந்தவர்களில் ஒருவர்கூட அடிகளாரைப் பின்பற்றி இத்தலைப்புகளை ஏன் பயன் படுத்தவில்லை; இது போன்ற வினாக்களுக்கு விடை காண்பது கடினம்தான். சுண்ணம் பற்றிய குறிப்பு குணமாலை, சுரமஞ்சரி இலம்பகங்களில் இடம்பெறினும் அடிகளாரின் பாடல்முறை அங்கு ஏற்கப்படவில்லை. இடிப்பதற்கு உரிய தாளகதியோடு கூடிய பண்முறையில் அமைந்துள்ளது திருப்பொற்சுண்ணம் என்று அப்பகுதியின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தோம். மாபெரும் கவிஞராகிய திருத்தக்கதேவர் இந்தத் தாளகதியோடு கூடிய பாடலமைப்பை ஏனோ மேற்கொள்ளவில்லை. திருப்பொற்சுண்ணம் திருப்பொற்சுண்ணம் என்ற தலைப்பில் இருபது பாடல்கள் உள்ளன. இதிலேயும் ஒரு வளர்ச்சி முறையைக் காணமுடிகிறது. அடிகளார் இடிக்கும் பொற்சுண்ணம், ஏனையோர் இடிக்கும் சுண்ணம் போன்றதன்று. ஏனையோர் உற்பத்திசெய்யும் பொற்சுண்ணம் அனைவரும் பயன்படுத்தக்கூடியதாகும். நீராடப் போகின்றவர் யார் வேண்டுமானாலும் ஒரு வீட்டில் தயாரிக்கப்பட்ட சுண்ணத்தை எடுத்துப் பயன்படுத்தலாம். மேட்டுக்குடி மக்கள் அனைவர் வீட்டிலும் இச்சுண்ணம் Lîòî) நாட்களுக்கு உபயோகப்படும்படியாகச் சேமித்து வைக்கப் பெற்றிருக்கும். இந்தச் சுண்ணத்தை இடிப்பதற்கு வீட்டை அலங்காரம் செய்தல், முளைப்பாரி வைத்தல், கவரி வீசுதல் முதலிய பிற நிகழ்ச்சிகள் எதுவும் நிகழ்வதில்லை. அன்றியும்