பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 325 நம்மைப் போன்ற மனிதர்கள் பயன்படுத்துவதற்காகவே இச்சுண்ணம் இடிக்கப்பெற்றது. ஆனால், அடிகளார் தயாரிக்கும் பொற்சுண்ணம் மனிதர்கள் பயன்படுத்துவதற்கு உரியதன்று. மூலப் பரம் பொருளாகிய இறைவனுடைய அபிடேகத்திற்கென்று செய்யப்பெற்ற பொற்சுண்ணமாகும். நாம, ரூபம் கடந்த பரம்பொருள் தில்லையிலும், திருப்பெருந்துறையிலும் திருவையாற்றிலும், திருவேகம்பத்திலும் வடிவுகொண்டு திருக்கோயிலில் அமர்ந்திருத்தலின் அந்த வடிவங்களை முன்னிலைப்படுத்தி அவர்கள் அபிடேகத்திற்குரிய சுண்ணத்தை இடிப்பதாக அடிகளார் பாடிச்செல்கிறார். இச்சுண்ணம் இறைவனுக்கு இடிக்கப்படுவது ஆதலின், அது இடிக்கப்படும் இடம் மெழுகி, தூய்மைப்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுவதாக முதல்மூன்று பாடல்களில் கூறுகி றார். பொற்குடம் வைத்தல், கோலமிடுதல், முளைப்பாரிக் கிண்ணங்களை வரிசையாக வைத்தல், திருவிளக்கேற்றுதல், தூபமிடுதல் ஆகிய அலங்காரங்கள் செய்யப்பெறுகின்றன. சுண்ணமிடிப்போர் தம்முள்பாடும் சாதாரணப் பாடல் களுக்குப் பதிலாக இறைவன் புகழைப் பாடவேண்டும் என்கிறார் அடிகளார். இதனை அடுத்து, திருநீற்றோடு பல அணிகலன்களையும் அணிந்துள்ள பெண்கள் உலக்கை பற்றி இடிக்கும்போது அவர்கள் உறுப்புகளும் அவற்றில் அணிந்துள்ள அணிகளும் ஒரு தாளகதியோடு ஆடுதலின், ஆட ஆட என்று அழகிய தொடர்மூலம் நம் கண்ணெதிரே அக்காட்சி நடைபெறுவதைப் போலப் பாடிச் செல்கிறார். எட்டுப்பாடல்களை இம்முறையில் பாடிச்செல்லும் அடிகளாருக்குத் திடீரென்று ஒர் ஐயம் பிறக்கிறது. சுண்னமிடித்தல் என்று சொல்லியவுடன் சாதாரண மனிதர்களுக்கு இடிக்கப்படும் சுண்ணம், அதற்குரிய கருவியாகிய உரல், உலக்கை, அவற்றுக்குச் செய்யப்பட்ட