பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அலங்காரம் என்பவைபற்றியே இதுவரை பாடிவிட்ட அடிகளார் உள்ளத்தில் ஒரு வினாத் தோன்றிவிட்டது. யாருக்கு இந்தச் சுண்ணத்தை இடிக்கிறோம்? பிரபஞ்சம் முழுவதும் தன் உடலின் பகுதியாகக் கொண்டு அதன் மேலும் கீழும் வளர்ந்திருக்கின்ற ஒருவனுக்கல்லவா இச்சுண்ணம் பர்தாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்; போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே என்ற முறையில் மேலும் கீழும் நிறைந்துநிற்கும் அப்பொருளுக்கு உரியது இச்சுண்ணம். பேதை ஒருபால் உண்டு; அவன் திருமேனியும் ஒன்றல்லவே! இப்படிப்பட்ட ஒருவனுக்கு சுண்ணம் இடிப்பதென்றால் நாம் அன்றாடம் பயன் படுத்தும் உரலும் உலக்கையும் எம்மாத்திரம் என்ற நினைவு அடிகளார் உள்ளத்தில் விரிவாகத் தோன்றியவுடன் ஒரு கணம் சிந்திக்கின்றார். இவன் வடிவுக்கு ஏற்பப் பொடி இடிக்க வேண்டுமானால் இப்பிரபஞ்சம் முழுவதும் உரலாக இருக்கவேண்டும். வையகம் முற்றும் என்றதால் பிரபஞ்சம் முழுதும் என்ற பொருள் கொள்ளப்பெற்றது. அந்த உரலுக்கேற்ற உலக்கையாக மாமேரு மலை இருக்க வேண்டும். இந்தச் சாதாரண உரலும் உலக்கையும் போதாது என்ற எண்ணம் அடிகளார் மனத்தில் தோன்ற, வந்திருந்த அடியவர்களும் உதவினர் என்பதை 200ஆம் பாடல் குறிப்பிடுகின்றது. பல உலக்கைகளைக் கைக்கொண்டு பல உரல்களில் சுண்ணமிடிக்கும் பெரியவர்கள் இது போதாதென்று கருதத்தொடங்கினர். அதே கருத்து அடிகளார் மனத்தையும் பற்றிக்கொள்ள, மேலும் ஒரு படி செல்கிறார் அடிகளார். உலக்கை பல ஒச்சும் பெரியவர்கள் இது போதாதென்று கருதினார்களே தவிர, மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் சிந்தனை தொடரவில்லை. ஆனால், அடிகளார். சிந்தனைமட்டும் மேலும் விரிந்ததால், போதாது” என்ற எண்ணத்திற்கு