பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 327 விடை காண்பார்போல வையகம் எல்லாம் உரலதாக’ என்று பாடுகின்றார். சுண்ணம் இடிப்பவர்கள், உலக்கை உரலில் விழும் தாளகதிக்கு ஏற்பச் சந்தம் அமைத்துப் பாடுவார்கள் என்பது முன்னர்க் கூறப்பெற்றது. ஆனால் அந்தப் பாடல் எந்தப் பொருள்பற்றிப் பாடப்பட வேண்டும் என்ற வினாவிற்கு விடைகூறுகிறார், 205ஆம் பாடலில் எந்தப் பொருள் பற்றி என்றால் இரண்டு வகைகளில் என்று' அதற்கு விடை கூறலாம். முதலாவது வகை அவனுடைய பெருமைகளைப் பற்றிப் பாடுவதாகும். இம்முறையில் பல பாடல்கள் பாடப்பெற்று விட்டன. இரண்டாவது வகை அவனுடைய எளிவந்த தன்மையையும் தங்களை அவன் ஆட்கொண்ட வண்ணமும் பற்றிப் பாடுவதாகும். சுண்னமிடிக்கின்றவர்கள் எதுபற்றிப் பாடலாம் என்ற வினாவை எழுப்பினார்கள்போலும்! அவர்கட்கு விடை கூறுவார்போலப் பாடுமின் நம்தம்மை ஆண்டவாறும் பணிகொண்ட வண்ணமும், பாடிப் பாடித் தேடுமின் எம்பெருமானை' என்று கூறிமுடிக்கின்றார். தம்மை ஆண்டதுபற்றிப் பாடுங்கள் என்று கூறுவது சரி. ஆனால், சுண்ணமிடிக்கின்றவர்களைப் பார்த்துப் 'பாடிப் பாடித் தேடுமின்' என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? நம்தம்மை ஆண்டவாறும் என்பதுகூட எவ்வாறு பொருந்தும் அடிகளார் ஒருவரைத்தானே திருப்பெருந்துறை நாயகன் ஆண்டுகொண்டான். அப்படியிருக்க, நம்தம்மை என்று தன்மைப்பன்மையாகக் கூறுவது எவ்வாறு பொருந்தும் ? யாவரினும் கடைப்பட்டவராக அடிகளார் தம்மைக் கூறிக்கொள்பவராதலின், தம்மை ஆட்கொண்ட அதே நேரத்தில் தராதரம் பாராமல் மக்கள் அனைவரையும்