பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஆட்கொண்டான் என்ற முடிவில் அடிகளார் இருந்தார் போலும். எந்தரமும் ஆட்கொண்டு' என்று அவரே பலமுறை கூறியுள்ளார். அதனாலேயே நம்தம்மை ஆண்ட வாறும் பணிகொண்ட வண்ணமும்’ என்று பாடுகிறார். அடுத்து, தம்மை ஆட்கொண்டவர் திடீரென்று மறைந்துவிட்ட காரணத்தால் அடிகளார். அவரைத் தேடி அலைந்தார் என்பதை அறிவோம். இப்பாடல் பாடப் படுகின்ற நேரம்வரை அவர் தேடியலைந்த குருநாதர் அகப்படவில்லை. எனவே உலக்கை பற்றிப் பொடி இடிக்கும் அனைவரையும் உளப்படுத்தி, ஆண்டவாறு பாடுதும் என்று கூறியவர், ஒருபடி மேலே சென்று பாடிப் பாடித் தேடுமின் எம்பெருமானை' என்றார். சென்ற பாடலில் திருவாச 205) தேடுமின் என்று கட்டளையிட்ட அடிகளாரிடம் யாரைத் தேடிச் செல்வது, அவனுக்குரிய அங்க அடையாளங்கள் யாவை என்ற வினாக்களைத் தேடிச்செல்பவர் கேட்பரல்லவா? அதற்கு விடை கூறுவதுபோல இப்பாடலில் (திருவாச 206) 'மை அமர் கண்டனை வான நாடர் மருந்தினை மாணிக்கக் கூத்தன் தன்னை, ஐயனை, ஐயர் பிரானை, நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டுபவனைத் தேடுமின் என்கிறார். தேடிச் செல்பவர்கள் ஒரே நிலையில் உள்ளவர்கள் என்று கூறுவதற்கில்லை. அடிகளாரைப் போன்று ஊனக் கண்ணால் அவனைக் காணும் பேறு பெற்றவர்களும் தேடுபவர்கள் கூட்டத்தில் இருக்கலாம். அவன் தம்மை ஆட்கொண்டான் என்பதைக்கூடத் தெரிந்துகொள்ள முடியாமல் அவன் உண்டோ இல்லையோ என்ற ஐயத்துடன் தேடுபவர்களும் அக்கூட்டத்தில் இருக்கலாம். மேலே சொன்ன அடையாளங்களை வைத்துக் கொண்டு தேடிச்செல்பவர்களில் மேம்பட்ட நிலையில்