பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 329 உள்ளவர்கள், எல்லா இடங்களிலும் எல்லாப் பொருளிலும் அவன் ஊடுருவி நிற்பதைக் கண்டுகொண்டார்கள் ஆதலின் மெய்யர் தம் மெய்யை என்றார். அடுத்து, கீழ் நிலையில் உள்ளவர்கள் இந்த அடையாளங்களைமட்டும் வைத்துக்கொண்டு தேடிச் சென்றவர்கள் ஆவர். அவர்களைப் பொறுத்தமட்டில் தேடப்பட்டவனின் உண்மை இயல்பை அதாவது எல்லாப் பொருளிலும் ஊடுருவி நிற்கும் நிலையை அறியாதவர்கள் ஆதலின் பொருள்களைத் தனித்தனியே கண்டனர். எனவே, இறுதியாக அப்படியொரு பொருளில்லை என்ற முடிவிற்கே வந்துவிட்டனர். உண்மையை அறியாதவர்கள் ஆதலின் அவர்களைப் பொய்யர் என்றார். அப்படி ஒரு பொருளே இல்லை என்ற முடிவிற்கு அவர்கள் வந்துவிட்டார்கள் ஆதலின் 'பொய்யர் தம் பொய்யினை’ என்றார். மையமர் கண்டனை திருவாச. 200 என்ற பாடலில் நீலகண்டம் முதலிய பல்வேறு அடையாளங்கள் கூறி, இத்தகையவனைத் தேடுமின் என்றார். இந்த அடை யாளங்களை வைத்துக்கொண்டு தேடவேண்டுமாயின் அறிவு, உணர்வு என்ற இரண்டும் தொழிற்படவேண்டும். இவற்றைப் பயன்படுத்த முடியாதவர்களை நோக்கி நாச்சுவை ஒன்றையே அடித்தளமாக வைத்து இறைவன் எத்தகையவன் என்பதை இதோ பாடுகிறார். க்ரும்பின் தெளிவு, பாகு, நாடற்கரிய நலம், நந்தாத் தேன், பழச்சுவை என்ற இவற்றையெல்லாம் அனைவரும் அனுபவித்திருப்பர் என்பதால் இவற்றை வரிசைப்படுத்தி இதுபோன்ற சுவையாகவுள்ளவன் அவன் என்று கூறிவருகிறார். அப்படியானால் இங்குக் கூறப்பெற்ற நாச் சுவை போன்றவனா அவன் என்று ஐயுறுவார்க்கு