பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 விடைகூறுவார்போலச் சித்தம் புகுந்து தித்திக்க வல்ல கோன்' என்று மேலுமோர் அடையாளம் கூறினார். அடுத்து வரும், அடி சற்று துணுக்கமானதாகும் அத்தகையவனைத் தேடும்பொழுதும், கண்டபோதும் நாத்தழும்பேற வாழ்த்திப் பாடுங்கள்’ என்கிறார். பாடுங்கள் என்றால் யாரை- என்ற வினாத் தோன்று மன்றோ? அதற்குரிய விளக்கம் இந்த அடியின் முற்பகுதியில் உள்ளது. பிறப்புறுத்து ஆண்டுகொண்ட கூத்தன்' ஆகும் என்பது அப்பகுதி. பிறப்புறுத்தல் ஒருசெயல்; ஆண்டுகொள்ளல் மற்றோர் செயலாகும். இதில் எது முந்தையது: அறுத்து என்பது இறந்தகால வினையெச்சமாகும். அப்படியானால் முதலில் பிறப்பை அறுத்துப் பின்னர் ஆண்டுகொண்டான் என்றல்லவா பொருள் தருகிறது? ஆண்டுகொள்ளல்தானே முதலில் நடைபெற்றது. அவனால் ஆட்கொள்ளப்பெற்ற பின்னரும் இவருடைய பூதவுடல் இருந்துகொண்டுதானே இருக்கிறது? அப்படியிருக்க, பிறப்புறுத்து என்பது எவ்வாறு பொருந்தும்? இங்கு, பிறப்பு என்பது இனி வரப்போகும் பிறப்பையாகும். வரப்போகும் பிறப்பை அறுப்பதற்கு அறிகுறியாகவே ஆண்டுகொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்படியானால் அறுக்கும் என்று எதிர்காலத்தில் அல்லவா சொல்லியிருக்க வேண்டும்? அதுதான் உண்மை; அது உறுதியாக நடைபெறப்போகின்றது. ஆதலின் அந்த உறுதி காரணமாக எதிர்காலத்தில் நிகழப்போகும் நிகழ்ச்சியை அறுத்து என்ற இறந்த கால வாய்பாட்டால் கூறினார். - திருப்பொற்சுண்ணத்தில் பெரும்பாலும் இறைவனு டைய வடிவு முதலியவற்றைப் பேசியுள்ளார். ஆனால், திருப்பெருந்துறை நிகழ்ச்சியில் தம்மை ஆட்கொண்டவை திருவடிகள் ஆதலின் இதுவரை வந்துள்ள பாடல்களில் பலப்பல இடங்களில் திருவடியைச் சுட்டிப் பாடுவது