பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 331 அடிகளாரின் வழக்கமாக இருந்துவருகிறது. இம்முறையை மாற்றி, இறைவனுடைய வடிவைப் பல்வேறு விதங்களில் திருப்பொற்சுண்ணத்தில் பாடினார் என்றாலும், அவரையும் மீறி 203ஆம் பாடலில் 'திருவடி பாடிப் பாடி' என்றும் 208ஆம் பாடலில் சடைமுடியான் கழற்கே என்றும் பாடியவர், 210ஆம் பாடலில் ‘தேவர் கனாவிலும் கண்டறியாச் செம்மலர்ப் பாதங்கள் காட்டி என்றும் பாடுகிறார். தேவர்கள் கனவிலும் காணாத திருவடியைத் தம்மாட்டுக் கொண்ட கழிபெருங் கருணை காரணமாக அவனே வந்து காட்டினான் என்பது இவ்வடிகளின் சிறப்பாகும். 21ஆம் பாடலிலும் வடிவழகே கூறுகிறார். அடுத்து 212ஆம் பாடலில் வடிவழகன் செய்த வீரச்செயல்கள் விரித்துப் பேசப்பெறுகின்றன. சரிபாதிப் பாடல்வரை ஈடிணையற்ற அவனுடைய வீரத்தைச் சொல்லிக்கொண்டு வந்தவர், அத்தகைய பெருவீரன் ஏழை அடியார்கள் மாட்டுக் கொண்ட பெருங்கருணையால் இறங்கிவந்து அருள் செய்ததை "ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயந்தனைப் பாடி' என்கிறார். திருக்கோத்தும்பி திருவாசகத்திலுள்ள பல தலைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் வேறு நூல்களில் அதிகம் காணப்பெறாத புதுமையுடையன என்று முன்னரே குறித்துள்ளோம். அவற்றுள் ஒன்று திருக்கோத்தும்பி என்ற தலைப்பில் வரும் இருபது பாடல்களாகும். இப்பாடல்கள் பலவற்றை அகத்துறைப் பாடல்களாகக் கொண்டு தலைவியும், தோழியும், இயற்பட மொழிதல், இயற்பழித்து மொழிதல், தூதனுப்புதல் என்ற முறையில் பலரும் பொருள் கொண்டுள்ளனர். -