பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்கண்ணம் 25 கைநழுவி விட்டது. நழுவிப்போன ஒன்றைத் தேடுகிறார்; கிடைக்க வில்லை; திகைக்கிறார்; மறுபடியும் தேடுகிறார். இதோ கிடைத்து விட்டது; இது கை நழுவிப் போகாது எனத் தேறுகிறார். அந்தத் தேற்றத்தினர் பயனாக, மனம் மட்டும் மகிழ்ச்சி அடையவில்லை. அடிமனத்தையும் தாண்டி ஆழத்தில் இருக்கும் சித்தம் மகிழ்ச்சியல்லாமல் களிப்பையே பெறுகிறது. பலகால் தேடி, திகைத்து, மறுபடியும் தேடிய நிலையில், பொருள் அகப்பட்டு விட்டால் அதனால் ஏற்படும் களிப்பு, சித்தத்தில் நிறைந்து உடல் முழுவதும் பரவுதலின், தம்மையும் அறியாமல் ஆடத் தொடங்குகிறார். நீங்களும் ஆடுங்கள்’ என்று சொல்கிறார். 206. மை அமர் கண்டனை வான நாடர் மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை ஜயனை ஐயர் பிரானை நம்மை - அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் பொய்யர்தம் பொய்யினை மெய்யர் மெய்யைப் போது அரிக்கண் இணைப் பொன் தொடித் தோள் பை அரவு அல்குல் மடந்தை நல்லிர் பாடிப் பொற்கண்ணம் இடித்தும் நாமே 12 மை-விடம். மருந்து-அமுதம். பிரான்-வள்ளல். போதுஅரிக்கண்-பூப்போலும் செவ்வரிபரந்த கண்கள். இப்பாடலில் வரும் நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் பொய்யர்தம் பொய்யினை மெய்யர் மெய்யை என்ற பகுதி ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும். 'பொய்யினை என்ற சொல்லுக்குப் பதிலாகப் 'பொய்யனை' என்று பாடங்கொண்டு, வெளிப்படாமல் இருப்பவன் என்று பலரும் உரைகண்டுள்ளனர். பொய்யன் என்ற சொல் பொய் பேசுபவன், பொய்யாக நடப்பவன் என்ற பொருள்களைத் தருமே தவிர, வெளிப்படாமல் இருப்பவன் என்ற பொருளைத் தருவது கடினம்.