பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 எனவே 'பொய்யினை என்று பாடங்கொண்டு பொருள் காண்பது சிறப்புடையதாகத் தோன்றுகிறது. அவ்வாறானால் இறைவனைப் பொய் என்று கூறுதல் பொருத்தமுடையதோ என்ற ஐயம் தோன்றத்தான் செய்யும். இந்நாட்டில் தோன்றிய சைவம், வைணவம் என்ற இரண்டிற்கும் தனிச்சிறப்பு ஒன்று உண்டென்றால், அது முரண்பாட்டில் முழுமுதலைக் காண்பதேயாகும். பொய்மெய்; குற்றம்-குணம்; நன்மை-தீமை; பகை-நட்பு முதலிய முரண்பட்ட இரட்டைகள், இறைவனைப் பொறுத்தவரை ஒரே பொருளையே கட்டுகின்றன என்று கண்டு கூறினர். உதாரணமாகப் பின்வரும் தொடர்களைக் காணலாம். குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆல வாயிலாய் (திருமுறை 3-52-3) பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ (கம்பர் வாலிவதை 129) சோதியனே துன் இருளே (திருவாச 1-72) தோய்ந்தும் பொருளனைத்தும் தோயாது நின்ற கடர் (கம்பர் சரபங்க. பி. நீ. படலம்-27) வெளியோடு இருளில்லை மேல் கீழ் இல்லை (கம்பர். சாபங், பி.நீ படலம் 28) இந்த அடிப்படையை மனத்துட் கொண்டு அடிகளாரின் 'பொய்யர் தம் பொய்யினை மெய்யர் தம் மெய்யை என்ற தொடருக்குப் பொருள் கண்டால், பொய்யென்று சுட்டப் படுபவனும் அவனே, மெய்யென்று சுட்டப்படுபவனும் அவனே என்பதை நன்கு விளங்கிக் கொள்ள முடியும். ஆட்கொண்டு அருமை காட்டும்’ என்ற தொடர் துண்மையானது. ஒரு பொருளின் தன்மையைப் புறத்தே