பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 343 வேண்டினர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்தவாறே - (திருவாச 248-49) எனத் திருமுருகாற்றுப்படை பாடிச்செல்கிறது. அவர்கள் தந்த எல்லாப் பெயர்களும் ஒரே பொருளைக் குறிப்பனவாகவே அமைந்துவிட்டன. அதனையே ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமிலாற்கு ஆயிரம் திருநாமம் பாடி’ என்று சொல்லுகிறார் பாட்டின் தொடக்கத்தில் திருமால் கதை நினைவிற்குவந்து அவருடைய மனத்தில் பெரியதோர் இடத்தை அது பிடித்துவிட்டது. திருமால் ஒருபுறம் இருக்க, கல்வி, அறிவு என்பவற்றிற்குத் தலைவன் எனப்படும் நான்முகனும் இதே தவற்றைத்தான் செய்தான்? எனவேதான் இருபது பாடல்கள் அடங்கிய இத் தொகுப்பில் பத்துப்பாடல்களில் நான்முகன், திருமால் கதை பேசப்படுகிறது. எல்லையற்ற செல்வத்தாலும் (திருமால்) எல்லையற்ற கல்வி அறிவாலும் (நான்முகன்) அல்லாமல் சூக்கும சரீரம் படைத்து காலம், இடம் என்பவற்றைக் கடந்துநிற்கும் தேவர்களாலும் அறியப்படாதவன் என்பதைக் கனவேயும் தேவர்கள் காண்பரிய கனை கழலோன்’ என்கிறார். இவர்களுக்கெல்லாம் காண்டற்கும், உணர்தற்கும் அரிய அத்திருவடி, தம்மைப் பொறுத்தமட்டில் மானிட வடிவில் வந்து காட்சி தந்து, ஆட்கொண்டு, தம் பிறவியை வேரறுத்தது என்பதை நினைக்கும்போது, அடிகளாரின் உள்ளம் பாகாய் உருகுகிறது. ஆதலால்தான், இருபது பாடல்களிலும் அந்த உருக்கத்தை, அந்த நன்றியை விரிவாகப் பேசுகிறார். சிறந்த நூல்கள் பயிலப்படும்பொழுது அவை நம் அறிவைத் தாக்குகின்றன. அதுவரை இல்லாத