பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 பின்னுரை 345 அதுவரை அடைந்திராத வளர்ச்சியை அடைந்து, நுண்மைத் தன்மையை அடையும். இதுவே உலகியல்பாகும். இதன் மறுதலையாக அடிகளார் இறை அனுபவத்தைப் பெற்றவுடன் தம்முள் நிகழ்ந்த மாற்றத்தை இதோ பேசுகிறார். என்ன புதுமை! எந்த ஒன்றும் வளர்ந்ததாகவோ விரிவடைந்ததாகவோ அவர் கூறவில்லை. அதற்குப் பதிலாகத் தம்முள் இருந்த எத்தனையோ பொருள்கள் மாண்டுவிட்டன என்றல்லவா பேசுகின்றார். ......எனைக் கலந்தாண்டலுமே அயல் மாண்டு அருவினைச் சுற்றமுமொண்டு அவனியின்மேல் மயல் மாண்டு மற்றுள்ள வாசகம் மாண்டு என்னுடைய செயல் மாண்டவா பாடி (திருவாக 245) என்ற பாடலில் வரும் கருத்துக்கள் சிந்திக்கத் தக்கன. இறையருள் உள்ளே புகுந்து அங்கே இருப்பவற்றை மாண்டுபோகச் செய்யுமா? பாடலில் பல முறை வரும் "மாண்டு’ என்ற சொல், செயலிழந்து என்ற ஒரே பொருளையே தருகின்றது. அயல் மாண்டு என்ற தொடருக்குப் பின்வருமாறு ஒரு பொருளைக் காணமுடியும். எதிரே உள்ள ஒரு பொருள் உள்ளே புகுந்தும்கூட அங்கேயும் அது தனியாக நிற்றல் கூடும். அதனைப் புகுமாறு ஏற்றுக்கொண்டபொருளும் தனியே நிற்றலும் கூடும். ஒரு கல்லை நீருக்குள் போட்டால் கல் நீருக்குள்தான் இருக்குமே தவிர, கல் நீரில் கரைந்து தன்னை இழப்பதில்லை. இதற்கு மறுதலையாக, அப்பினுள் பெய்த உப்பு, அப்பினுள் கரைந்து தன் தனித்தன்மையை இழப்பதை நாம் அறிவோம். இப்பொழுது குருநாதர் இவரைப் புகுந்து ஆண்டார். அடுத்த வினாடி குருநாதர் உள் புகுந்து திருவாதவூரர் என்ற மனிதரின் சித்தம்,