பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 நான்முகன் முதலானவர்களுக்குக் கிட்டாத திருவடி தம் கண்ணெதிரே தோன்றி, தமக்கு அருள் செய்ததைத் தெள்ளேணத்தில் பத்து இடங்களில் நினைந்துநினைந்து உருகுகின்ற ஒருவர், வினா விடை என்ற பெயரில் திருச்சாழலை எவ்வாறு பாடமுடிந்தது? அப்படியே பாடியிருப்பினும் தெள்ளேணத்தை அடுத்து அது இடம்பெற்றது எவ்வாறு என்ற வினாவை எழுப்பிக் கொண்டு, இவை இரண்டு பகுதிகளையும் மறுமுறை பார்த்தால் சில எண்ணங்கள் எழுகின்றன. திருவடிப் பெருமையைப் பத்துப்பாடல்களுக்கும் மேலாகப் பாடிய அடிகளார், தெள்ளேணத்தின் கடைசிப் பாடலில் திடீரென்று உருவ வழிபாட்டில் இறங்கி விடுகிறார். கொக்கிறகு, கோல்வளையாள் நலம், தில்லைக் கூத்து ஆகியவை இப்பாடலில் இடம்பெறுகின்றன. இவற்றிடையே நஞ்சுண்ட வரலாறும் இடம்பெறுகிறது. தெள்ளேனத்தின் இறுதிப் பாடலில் கோல்வளையாளும், நஞ்சுண்ட செய்தியும் வந்ததன் விளைவாக அவனுடைய வடிவையே மேலும் சிந்திக்கத் தொடங்கிச் சாழலின் முற்பகுதிப் பாடல்கள் தோன்றியிருக்கலாம். இவ்வாறு தரப்பெறும் விளக்கம் தெள்ளேனத்தின் பின் திருச்சாழல் வைக்கப்பெற்றிருக்கின்ற அடிப்படையைக் கொண்டு தந்ததாகும். இவ்வாறு கூறுவதால் இந்த வைப்புமுறை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று பொருளல்ல. அவனுடைய எளிய கோலம், சுடுகாட்டில் உறைதல் ஆகியவற்றைப் பாடிக்கொண்டுவரும்பொழுதே, அவனுடைய பேராற்றல் நினைவுக்கு வருகிறது. அதனையே 'காயில் உலகனைத்தும் கற்பொடிகாண்' (திருவாச 257) என்று பாடுகிறார். ‘தேன்புக்க தண்பனை சூழ் (திருவாச. 268) என்று தொடங்கும் பாடல் இன்று விஞ்ஞானம் கூறும் புதுமையை