பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 355 அன்றே அடிகளார் தம் மெய்ஞ்ஞானத்தால் கண்டு கூறினார் என்பதற்கு அடையாளமாகும். அவன் நட்டம் பயில்கிறான் என்றால், பிரபஞ்சம், அதிலுள்ள சரம், அசரம் ஆகிய அனைத்துப் பொருள்களும் ஆடிக்கொண்டே யிருக்கின்ற்ன என்பது பெறப்பட்டது. ஏனென்றால், அனைத்திலும் கலந்து ஊடுருவி உள்ளான் அவன் என்பது இந்த மெய்ஞ்ஞானிகள் கண்ட உண்மையாகும். எனவே, அவன் ஆடுகிறான் என்றால் அவையும் ஆடுகின்றன என்பதுதானே பொருள்? அடுத்து அவன் ஆட்டத்தை நிறுத்தினான் என்றால் பிரபஞ்சமும் அதிலுள்ள பொருள்களும் ஆட்டத்தை நிறுத்திவிட்டன என்றுதானே கொள்ள வேண்டும்? இவை ஆட்டத்தை நிறுத்தினால் நிலைபேற்றை இழந்து அழிந்துவிடும் என்பது தேற்றம். எனவேதான் நட்டம் பயின்றிலனேல் ஊன்புக்கு வேல் காளிக்கு ஊட்டாம் என்று பாடியுள்ளார். 273ஆம் பாடல் இறைவனுக்கு ஒரு ஒப்பற்ற இலக்கணம் வகுக்கின்றது. தம்பெருமை தானறியாத் தன்மையன்’ என்பதே அவ்விலக்கணமாகும். ஒருவர்க்கு வரும் பெருமை சிறுமை என்பன அவருடைய செயல் முதலியவற்றை ஆய்ந்து ஏனையோர் தரும் மதிப்பீடே ஆகும். இக்கருத்தை ஒருவர்தம் பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தம் கருமமே கட்டளைக்கல் (திருக்குறள்: 505) என்ற குறட்பா வலியுறுத்துகிறது. எனவே, இறைவனுடைய பெருமையை யார் கூறுவது? அவனுடைய செயல்கள் அறிந்தவர் அல்லவோ அப்பெருமையை ஆய்ந்து சொல்ல முடியும்? அவனுடைய செயல்களை ஒருசிறிதாவது அறிந்தவர் யாரேனும் உண்டா? இறைவன் செயலை ஒரு சிறிதும் அறிய முடியாதவைகளாகிய உயிர்கள் அவன் பெருமையை அறிதலே முடியாது என்றால், பேசுவது எங்ங்னம்? இப்பொழுது ஒரு நியாயமான வினாத் தோன்றும்,