பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 சைவசிந்தாந்த அடிப்படையில் பலர் விரிவாகப் பொருள் எழுதியுள்ளனர். * இங்குக் கூறப்பெற்ற உறவுப் பெயர்கள் அனைத்தும் பரு உடலை அடிப்படையாக வைத்தே பெறப்பட்டவை ஆகும். தனித்து இயங்கும் ஆன்மாவிற்கு இந்த உறவுப் பெயர்கள் பொருத்தமில்லாதவை. அவ்வாறாயின் அடிகளார் இவ்வளவு விரிவாகக் கூறியதன் கருத்தென்ன என்று சிந்தித்தால், ஒன்றை விளங்கிக்கொள்ள முடியும். உடம்பெடுத்த ஒவ்வொரு மனிதனுக்கும் சிற்சில உறவுகளில் தனித்த ஈடுபாடு இருத்தல் இயல்பு. ஏகம் சத்' என்ற வாக்கின்படி உள்ளது ஒரே பொருளேயாகும். அது நாம ரூபம் கடந்தது. அப்பொருள் தனித்து நிற்கும்பொழுது எவ்விதத் தொழிற்பாடுமின்றி இருக்கும்பொழுது, சிவம் என்ற பெயரை அறிவுடைப் பெருமக்கள் அதற்குத் தந்தனர். தனித்து நின்ற அப்பொருள், படைத்தல் முதலிய செயல்களைச் செய்யும் போது, அதனைச் செய்யும் ஆற்றலுக்குச் சக்தி என்ற பெயரிட்டு வழங்கினர். மூலப்பொருளை, அதன் இயல்பை அறியமாட்டாத உயிர்கள், அப்பொருள் தமக்குச் செய்த பேருபகாரத்தைக் கருதி, தாய் என்று கூறி வழிபட்டன. இந்த உறவுமுறை விரிவடையும்போது, வேறு உறவுப் பெயர்களும் அங்கு இடம்பெறலாயின் உள்ளது ஒரே பொருளாதலின் அதனைத் தாய் என்று கூறினாலும், தந்தை என்று கூறினா லும், தமையன் என்று கூறினாலும் குறிக்கப்படும் பொருள் ஒன்றே என்பதை அறிந்துகொண்டால் அடிகளார் கூறும் தொடர்களுக்குரிய பொருளை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். ‘எங்கள் அப்பன், எம் பெருமான், இமவான் மகட் குத் தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், தமையன், எம்