பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்கண்ணம் 29 ஐயன்' என்று பாடும்பொழுது இத்தனை உறவுப் பெயர்க ளுக்கும் மூலமாக இருப்பவன் எம் ஐயனே என்பது விளங்கும். 208. சங்கம் அரற்றச் சிலம்பு ஒலிப்ப தாழ் குழல் சூழ்தரும் மாலை ஆட செம் கனி வாய் இதழும் துடிப்பச் சேயிழையிர் சிவலோகம் பாடிக் கங்கை இரைப்ப அரா இரைக்கும் கற்றைச் சடைமுடியான் கழற்கே பொங்கிய காதலின் கொங்கை பொங்கப் பொன் திருச்சுண்ணம் இடித்தும் நாமே 14 கங்கை இரைப்ப-கங்கையாறு பேரொலி எழுப்ப. அரா இரைப்ப-பாம்பு புஸ்புஸ் என்று ஒலி எழுப்ப, சங்கம்-வளையல். அரா-பாம்பு. பொற்சுண்ணம் இடிக்கின்றார்கள் ஆதலின் உலக்கை பிடித்த கைகள் மாறிமாறி மேலும் கீழும் செல்லுதலின் அம்மகளிர் அணிந்த சங்கு வளையல்கள் இவ்விரைவான அசைவு தாங்காமல் அரற்றுகின்றன என்றார். சிவலோகம் பாடும்போது, செங்கனி வாய் இதழ் துடிக்கப் பாட வேண்டும் என்கிறார் அடிகளார். 205ஆம் பாடலில் வாயை முழுவதும் அங்காந்து இறைவன் புகழைப் பாடவேண்டும் என்று கூறுகையில், அம்பவளம் துடிப்ப என்றார். வாய் அங்காந்து இருக்கும்போது உதடுகள் துடிப்பது எளிதாக நடைபெறுவது அன்று என முன்னரே விளக்கப்பெற்றது. இந்தப் பாடலில் வாய் திறக்கும் பிரச்சினை தோன்றவில்லை. சிவலோகம் பாடி' என்றதால் தாம் பெற்ற அனுபவத்தை இங்கு யாரும் கூறவில்லை. அனுபவத்தைக் கூறும்பொழுது வாய் திறந்து அம் பவளம் துடிப்ப'ப் பாடினர்.