பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 205ஆம் பாடலில் வாய்விட்டு உரக்கப் பாடுங்கள் என்று சொன்னதையும், இப்பாடலில் அவ்வாறு சொல்லாமல் சிவலோகம் பாடுங்கள் என்று சொன்னதையும் ஒன்றாக வைத்துப் பார்க்கும்போது, ஒரு புதிய சிந்தனை தோன்றுகிறது. வாய்விட்டு உரக்கப் பாடுங்கள் என்று கூறும் இடத்தில் உரக்கப் பாடவேண்டும் என்று எதனைக் கூறினார்: 'நம்தம்மை. ஆண்டவாரும் பணிகொண்ட வண்ணமும்’பற்றி உரக்கப் பாடவேண்டும் என்கிறார் அடிகளார். சிவலோகம்பற்றிப் பாடும்போது உரக்கப் பாடுங்கள் என்று வெளிப்படையாகக் கூறாமையால் முணு முணுத்தபடியே பாடினாலும் தவறில்லை என்றாயிற்று. ஏன் இந்த வேறுபாடு அடிகளாரின் வாக்குப் படியே பார்த்தால், ஆண்டுகொள்ளப்படுவதற்குரிய தகுதி தம்பால் இல்லை என்றும், அவன் தம்மாட்டுக் கொண்ட கருணை காரணமாகவே ஆண்டான் என்றும் பல இடங்களில் கூறியுள்ளார். தம்மையும் ஒரு பொருளாக மதித்துத் திருவாசகம் பாடும் வாய்ப்பை நல்கினான் என்றும் அவரே பாடுகின்றார். அப்படியானால் என்ன பணியை இவர் செய்ய வேண்டும் என்று இறைவன் கருதினான்: 'பரா அமுது ஆக்கினன்' என்று சுருக்கமாகக் கூறினார் அடிகளார். பிற்காலத்தில் தோன்றிய அருணகிரிநாதப் பெருமான் 'பாடும் பணியே பணியாய் அருள்வாய் (கந்தரனுபூதி: ; ) என்று வேண்டிக்கொள்கிறார். அப்படியானல் அடிகளா ரின் ஆண்டவாறும் பணி கொண்ட வண்ணமும் என்ற தொடருக்குப் பொருள் நன்றாக விளங்கிவிட்டது. இதனையே வாய்விட்டுப் உரக்கப் பாடவேண்டும் என்று அடிகளார் விரும்புகிறார். பிறவிக் கடலில் சிக்கிக் கரையேறும் வழியறியாமல் அல்லலில் உழன்றுகொண்டிருக்கும் ஆன்மாக்களுக்கு, நேரிடையாக இற்ைவன் திருவடிகளைப் பற்றிக்கொள்ளும்