பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்கண்ணம் 31 ஆற்றல் இல்லை. பற்றவேண்டும் என்ற எண்ணம், இல்லாமல்- பற்றிக்கொள்ளும் வழியும் அறியாத ஆன்மாக் களுக்கு ஒரு மாபெரும் நம்பிக்கையைக் கலங்கரை விளக்கம்போலத் தந்த பெருமை அடிகளாருக்கே உரியதாகும். எதிர்பாராமல் மாபெரும் அருளைக் குருவினிடம் பெற்று, அவர் இட்ட பணியைத் தலைமேற் கொண்டு செய்து இப்பிறப்பிலேயே உய்கதி அடையும் வாய்ப்பைப் பெற்றார் அடிகளார். ஆதலின், தம்முடைய அனுபவத்தை உரக்கக் கூறும் முகமாகப் (வாய் திறந்து பாடும் செயலில்) பொதுவாக மனித இனத்திற்கும், சிறப்பாகத் தமிழினத்திற்கும் நம்பிக்கை என்னும் . தோணியைத் தந்து உதவிய பெருமை அடிகளாருக்கே உரியதாகும். 209, ஞானக் கரும்பின் தெளிவை பாகை நாடற்குஅரிய நலத்தை நந்தாத் தேனைப் பழச் சுவை ஆயினானை சித்தம் புகுந்து தித்திக்க வல்ல கோனை பிறப்பு அறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை நாத் தழும்பு ஏற வாழ்த்திப் பானல் தடம் கண் மடந்தை நல்லீர் பாடிப் பொற்கண்ணம் இடித்தும் நாமே 15 ஞானக்கரும்பு-சிவம். நந்தா-கெடாத பானல்-கருங் குவளை. இப்பாடலில் இறைவனைக் கரும்பின் தெளிவு, பாகு, குறையாத தேன், பழத்தில் கிடைக்கும் சுவை என உருவகப் படுத்துகிறார். கரும்பிலிருந்து சாற்றை எடுக்க வேண்டுமானால் முயற்சி மேற்கொண்டே இரவேண்டும். அந்தத் தெளிவையும் காய்ச்சிய பிறகுதான் பாகு கிடைக்கும். தெளிவிலிருந்து பாகு கிடைத்தலின் இவை இரண்டையும் பிரித்துச் சொல்ல வேண்டிய காரணம் என்ன? கரும்பிலிருந்து சாற்றை எடுக்க ஒரு முயற்சி, காற்றிலிருந்து பாகை எடுக்க மற்றொரு முயற்சி. இவ்வளவு