பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 முயன்று பெறக்கூடிய பாகாக ஏன் இறைவனைச் சொல்ல வேண்டும்? அன்பின்வழிச் செல்பவர்கள், கண்ணப்பர், அடிகளார் போன்றவர்கள், அன்பு ஒன்றே துணையாகக் கொண்டு வேறு எவ்வித முயற்சியும் இன்றி இறையருளைப் பெற்றனர். மெய்யடியார்கள் கண்ட எளிதான இந்த நெறிக்கு மாறாக ஞான மார்க்கம் என்ற நெறியும் உண்டு. அவ்வழியில் நாம் யார், இறைவன் யார், நமக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது போன்ற வினாக்களை எழுப்பி, உடலை வருத்தித் தவம் செய்து இறுதியாக அவனை அடைவது ஞான மார்க்கம் என்பது. அதனைக் குறிக்கவே ஞானக் கரும்பு' என்றார் அடிகளார். அடிகளாருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவராகிய நாவரசர் பெருமான் இதனைச் சற்று விளக்கமாகவே கூறியுள்ளார். “ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள் ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன்”

  • (திருமுறை: 5-91-3)

இப்பாடலின்படி பார்த்தால் சில ஞானிகள்மட்டும் ஞான மார்க்கத்தில் ஈடுபடுவர் என்பது தெரிகிறது. இறுதியில் இறைவனை அடைதல் இரண்டு வழிக்கும் பொதுவாயினும் பெருமுயற்சி செய்து பயன்பெறுகின்ற வழி ஞான மார்க்கம். அதனைக் குறிப்பால் உணர்த்தவே "ஞானக் கரும்பின் தெளிவை என்றார். ஞானக்கரும்பு என்றும், தெளிவு என்றும், பாகு என்றும் அடிகளார் தனித் தனியே பிரித்துக் கூறியமையின் அதனைப் படிக்கும் பொழுது சில சிந்தனைகள் தோன்றுகின்றன. தெளிவும், பாகும் ஒன்றுக்கொன்று ஒரளவு மாறுபட்டவையாகும். உடலுக்குத் தேவையில்லாததும் ஒரளவு ஊறு செய்கின்றதும் ஆகிய சில பொருள்கள் கருப்பஞ்சாற்றில் உள்ளன. இது