பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்கண்ணம் 33 கருதியே இன்றுகூடக் கருப்பஞ் சாற்றைக் குடிப்பவர்கள் எலுமிச்சம் பழச்சாற்றை அதனுள் பிழித்து அருந்துவர். சாற்றில் உள்ள குறைபாடு நீங்கவேண்டுமானால் அதனை நெருப்பில் இட்டுக் காய்ச்ச வேண்டும். இந்த உருவகத்தால் தோன்றும் சிந்தனைகளை ஞான மார்க்கத்தில் செல்லுபவர்களுக்கு ஏற்றியும் காணலாம் ஞான மார்க்கத்தின் அடிப்படை அறிவாகும். இவ்வழிச் செல்பவர் அறிவின் துணையோடு வினாக்களை எழுப்பிக் கொண்டு சென்று, இறைவனை அறிய முற்படுகின்றார்கள். இந்த ஆராய்ச்சியில் இறங்கிப் பெருமளவு முன்னேறிய நிலையில் ஒரு பெரிய ஆபத்து முன்னே நிற்கும். அதனைக் கடந்து செல்வது அவ்வளவு எளிதான காரியமன்று. அந்த ஆபத்துத்தான் நான் அறிகிறேன்' என்ற முனைப்பு ஆகும். இறைவன் பற்றிய ஆய்வு கரும்பின் தெளிவாக இருக் கின்றது. தெளிவில் உள்ள வேண்டத்தகாத பொருள்போல இறை ஆய்வில் இந்த நான் கலந்து நிற்கின்றது. தெளிவை நெருப்பில் இட்டுக் காய்ச்சுவது போல நானோடு கலந்த இறைபற்றிய ஆய்வை அவன் அருள் என்ற நெருப்பில் இட்டுக் காய்ச்ச வேண்டும். அவ்வாறு காய்ச்சி நானை' ஆவியாகப் போகச் செய்துவிட்டால், அந்த இறை ஆய்வு இறையுணர்வு என்ற கட்டியாகத் தங்கிவிடும். இத்தனைக் கருத்துக்களையும் உள்ளடக்கியே ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை' என்கிறார் அடிகளார். திருவாசகத்தில் பல இடங்களில் இறைவனைக் கரும்பின் தெளிவு என்றும், பாகு என்றும் பாடியுள்ளாரேஅவ்விடங்களில், இவ்விளக்கம் பொருந்துமா என்றால், பொருந்தாது என்பது விடையாகும். ஏனெனில் ஞான மார்க்கத்தை விட்டு அன்புவழியில் செல்பவர்கட்கு நான் என்ற பிரச்சினை தோன்றுவதேயில்லை. ஆதலால்தான் அடிகளார் ஞானக் கரும்பு என்று அடைகொடுத்துப்