பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3' பேசினார். ஆனால், இங்கே ஞானக்கரும்பு என்று சொன்னதாலேயே இச்சிந்தனை தோன்றலாயிற்று. மூன்றாவதாக உள்ளது பழத்தின் சுவை. பழத்தின் சுவையை அனுபவிக்க ஒரு சிறு முயற்சி செய்தாலே போதும், கரும்புக்கட்டி எடுப்பதற்குச் செய்யப்படும் பெருமுயற்சி போன்ற எதுவும் தேவையில்லை. எனவே, பெருமுயற்சி, சிறுமுயற்சி என்பவற்றினிடையே எவ்வித முயற்சியும் செய்யாமல் இன்பம் பெறுவதைத் தேனின் சுவை என்கிறார். 210. ஆவகை நாமும் வந்து அன்பர் தம்மோடு ஆட்செயும் வண்ணங்கள் பாடி விண்மேல் தேவர் கனாவிலும் கண்டு அறியாச் செம் மலர்ப் பாதங்கள் காட்டும் செல்வச் சே வலன் ஏந்திய வெல் கொடியான் சிவபெருமான் புரம் செற்ற கொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப் பாடிச் செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே 16 ஆவகை-பொருந்தும் வகை. சேவகன்-வீரன். சிவபுராணம் தொடங்கி இதுவரை திருவடிப் பெருமை யையே மிகப்பல இடங்களில் பாடியுள்ளார். அதற்குரிய காரணத்தையும் முன்னர்க் கூறியுள்ளோம். இந்தப் பாடலிலும் அந்தப் பழைய கருத்து, தொடக்கத்தில் இடம் பெறுவது உண்மைதான். தேவர்கள் கனவிலும் கண்டு அறியாச் செம்மலர்ப் பாதங்கள் என்றுதான் தொடங்குகிறார். சங்கப் பாடல்களிலேயேகூட நின்னில் சிறந்தவை நின் நாமங்கள்’ என வருதலால் இறைவன் திருப்பெயரை விடாது கூறி, அதன் வழியாகவே வீடு பெற்றவர்களை இந்நாடு கண்டது உண்டு. தமிழ்ச் சான்றோர்களின் ஆழ்ந்த அனுபவத்தில் ந்ன்கு ஊறிய இக்கருத்து அடிகளாரின்