பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்கண்ணம் 35 இப்பாடலில் நான்காவது அடியில் இடம் பெற்றுள்ளது. சிவபெருமானை வெற்றி பொருந்திய இடபக்கொடியை வலக்கையில் ஏந்தியவன் சே வலன் ஏந்திய வெல்கொடியான்), சிவபெருமான், சேவகன் என்றெல்லாம் பாடி விளித்து அத்தகையவனுடைய நாமங்களைப் பாடிப் பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே என்கிறார் அடிகளாா. 211. தேன் அகம் மா மலர்க் கொன்றை பாடி சிவபுரம் பாடி திருச் சடை மேல் வான் அகம் மா மதிப் பிள்ளை பாடி மால் விடை பாடி வலக் கை ஏந்தும் ஊன் அகம் மா மழுச் சூலம் பாடி உம்பரும் இம்பரும் உய்ய அன்று போனகம் ஆக நஞ்சு உண்டல் பாடிப் பொன் திருச் சுண்ணம் இடித்தும் நாமே 17 மதிப்பிள்ளை-பிறைமதி, போனகம்-உணவு. இப்பாடலின் நான்காவது அடி நீலகண்டனுடைய தனிச்சிறப்பைப் பாடுகிறது. சிவன் என்ற பெயரைச் சொல்லாவிட்டாலும் உருத்திரன் என்ற பெயரோடு இரண்டு பாடல்களைப் பாடும் இருக்கு வேதம் உருத்திரன் என்ற இடத்தைக் கூறுமிடத்து நீலகண்டன் என்று பேசுகிறது. கிருஷ்ண யஜுர் வேதத்தில் வரும் பூரீருத்திரத்தில் 'நீலகண்டாய' என்று சிவன் பெருமை பேசப்பெறுகிறது. ஆனால், இவ்விரு இடங்களிலும் எதற்காகச் சிவபெருமான் நீலகண்டத்தைப் பெற்றான் என்பது கூறப்படவில்லை. உயிரின்மாட்டுக் கொண்ட கருணை ஒன்றே காரணமாக ஆலகால விடத்தை ஏனையோர் உணவு அருந்துவதுபோல போனகமாக மிக்க மகிழ்ச்சியுடன் உண்டான் என்பதை அடிகளார் உம்பரும் இம்பரும் உய்ய அன்று போனக மாக நஞ்சு உண்டல்’ என்று பாடுகிறார்.