பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 212. அயன் தலை கொண்டு செண்டு ஆடல் பாடி அருக்கன் எயிறு பறித்தல் பாடிக் கயம்தனைக் கொன்று உரி போர்த்தல் பாடி காலனைக் காலால் உதைத்தல் பாடி இயைந்தன முப்புரம் எய்தல் பாடி ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயம் தனைப் பாடிநின்று ஆடி ஆடி நாதற்குச் சுண்ணம் இடித்தும் நாமே 18 செண்டு-பூப்பந்து. இயைந்தன-தம்முள் பொருந்தியனவாகிய, அருக்கன்-பகன் என்னும் சூரியன். கயம்-யானை. நயம்மேன்மை. இறைவனுடைய மாவீரச் செயல்களை முதல் மூன்று அடிகளில் வாடிய அடிகளார் பாட்டின் இறுதியில் ஏழை அடியோம் ஆகிய எங்களையும் ஆண்டுகொண்டார் என்று பாடுகிறார். எல்லை கடந்து நிற்கும் அவன் வீரத்தைப் போலவே ஏழை அடியார்களை ஆட்கொள்ளும் அவன் கருணையும் எல்லை கடந்து விரிகின்றது என்பதே இங்குக் கூறப்பெற்ற நயம் ஆகும். 213, வட்ட மலர்க் கொன்றை மாலை பாடி மத்தமும் பாடி மதியும் பாடி சிட்டர்கள் வாழும் தென் தில்லை பாடி சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடி கட்டிய மாசுணக் கச்சை பாடி கங்கணம் பாடி கவித்த கைம்மேல் இட்டு நின்று ஆடும் அரவம் பாடி ஈசற்குச் சுண்ணம் இடித்தும் நாமே 19 வட்டமலர்-பிறை வடிவமான மலர். மத்தம்-ஊமத்தம் பூ. மாசுணம்-பாம்பு. கச்சை-அரைப்பட்டி. சிட்டர்கள்-மேலோர்கள்.