பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்கண்ணம் 37 கவித்த கைம்மேல் இட்டுநின்றாடும் அரவம் என்ற தொடர் தூக்கிய திருவடியைக் காட்டிநிற்கும் வளைந்த கையின் மேல் கட்டப்பட்ட பாம்பு படமெடுத்து ஆடுகின்றது என்ற பொருளைத் தரும். 214. வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு சோதியும் ஆய் இருள் ஆயினார்க்கு துன்பமும் ஆய் இன்பம் ஆயினார்க்கு பாதியும் ஆய் முற்றும் ஆயினார்க்கு பந்தமும் ஆய் விடும் ஆயினாருக்கு ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 20 மேலே 206ஆவது பாடலில் . முரண்பாட்டின் இடையேமுழுமுதலின் சிறப்புக் கூறப்பெற்றது. அதனையே விரிவாக இப்பாடலில் பேசுகிறார். வேதம் என்பது ஒலிக்கூட்டம். வேள்வி என்பது சடங்குகள். ஒலிசிறந்த வேதம் என்றதால் சக்தி வாய்ந்த மந்திரங்களும் சடங்குகளும் அவனே என்றார். பொய்மை, இருள், துன்பம், பாதி, பந்தம் என்ற சொற்கள் அறிவு கொண்டு ஆராயும் நம் பார்வையில், முறையே மெய்ம்மை, சோதி, இன்பம், முற்றும், வீடு என்பவற்றிற்கு எதிரானவை என்றுகொண்டு பேசி வருகிறோம். ஒன்றே பொருள். எங்கும் எல்லாமாய் இருப்பது அதுவே என்று இறையிலக்கணம் வகுத்த பின்பு மேலே கூறப்பெற்ற இரட்டைகள் பொருளற்றுப் போய்விடுகின்றன. பொய்ம்மை, இருள், பாதி என்பவை கருத்தளவில் உள்ளனவே தவிர இத்தகைய பொருள்கள் இல்லை என்று கூறுவாரும் உண்டு.