பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அதாவது சோதி இல்லாத இடம் துன்னிருள் என்றும், இன்பம் இல்லாத இடம் துன்பம் என்றும் நாம் பேசிவருகின்றோம். மனத்தளவில் இன்மைக்கோர் வடிவம் கொடுத்து அதனை இருள் என்றும் துன்பம் என்றும் பாதி என்றும் பேசி வருகின்றோம். இவ்வடிவு கற்பனை அளவில் நாம் கொண்ட ஒன்றேதவிர உண்மையில் இருள் முதலியவை இல்லை. மெய்ம்மைதான் என்றும் உள்ளது. அந்த மெய்ம்மையை முற்றிலும் அறிந்துகொள்ள இயலாத அறிவு தன்னுடைய வளர்ச்சிக்கு ஏற்ப ஒரு விடிவைக் கற்பிக்கின்றது. அந்த நிலையில் அதுவே மெய்யென்றும், ஒளியென்றும் முழுமையென்றும் மனம் கற்பனை செய்து கொண்டிருக்கிறது. பின்னர், வளர்ச்சியடைந்த நிலையில், முன்னர் ம்ெய்ம்மை என்று கற்பனை செய்து கொண்ட 94ئیgi/ மெய்ம்மை அல்லாதது என்றும், ஒளி என்று கருதிய பொருள் ஒளியற்றது என்றும் அறிந்துகொள்ள முடிகிறது. இப்படி அறிந்து கொண்ட நிலையில், முதலில் கற்பனையில்பட்ட மெய்ம்மை, மெய்ம்மையன்று என்று தெரிந்தவுடன், இந்த மனம் அதற்கு ஒரு பெயரைத் தருகின்றது; அதுவே பொய்மை ஆகும். அதுபோலவே இருள், பாதி என்பனவும் ஆகும். மெய்ம்மையும் பொய்மையும் ஆயினார், சோதியும் துன்னிருளும் ஆயினார் என்று அடிகளார் கூறும்பொழுது வளர்ச்சியடைந்த, முதிர்ந்த, அறிவால் காணப் பெற்ற பொருளுக்குள்ள பெயரும் வளர்ச்சி குறைந்த அறிவு தந்த பெயரும் முன்னும் பின்னுமாக இங்கு இடம் பெற்றுள்ளன.