பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 379 இற்றைநாளில் இப்பாடலைக் கற்போர் இறைச்சி முதலியவை கொண்டு, இவ்வாறு தாமும் பூசனை செய்யலாமோ என்று கருதினால், தாராளமாகச் செய்யலாம். ஆனால் மூன்று திட்டங்களுக்கு உட்பட்டு இது செய்யப்படவேண்டும். முதலாவது கண்ணப்பரைப் போலத் தற்போதம் இழந்து, தேகப்பிரஞ்சை அற்றவர்களாக, இவர்கள் ஆகவேண்டும். இரண்டாவது, திண்ணனார் தமக்குப் பசி என்றோ, தாகமென்றோ எதனையும் நினைத்தாகக்கூடத் தெரியவில்லை. இவர்களும் அப்படி ஆதல் வேண்டும். மூன்றாவது, திண்ணனார் தம்முடைய கண் என்றும் பாராமல் இரண்டாவது கண்ணையும் எடுத்துவிட்டால் அடுத்த விநாடி எப்படி வாழமுடியும் என்றும் சிந்திக்காமல், தான் என்ற ஒன்று செத்த நிலையில், தோண்டத் தொடங்கினார். அந்த நிலைக்கு வந்தவர்கள் எதை வேண்டுமானாலும் இறைவனுக்குப் படைக்கலாம் என்பதே விடையாகும். இறைச்சி பற்றிய பிரச்சினை இல்லாமல் பூசை முதலிய செய்வோர் வழிபாடு சிவகோசரியார் வழிபாடு போன்றதாகும். கண்ணப்பர் வரலாற்றை 317ஆம் பாடலில் விரிவாகப் பாடிய அடிகளார் 321ஆம் பாடலில் சண்டேசுர நாயனார் கதையைக் கூறியுள்ளார். இவை இரண்டும் இரண்டு துருவங்களில் உள்ளவை. திண்ணனாரைப் பொறுத்த மட்டில் வாய் எச்சில் அபிடேகப் பொருளாகிறது. விசாரசருமனை பொறுத்தமட்டில் அபிடேகத்திற்குரிய பால் உள்ள பாத்திரத்திலேயேகூடக் கால் படக்கூடாது என்ற கொள்கை நிலவுகிறது. விசாரசருமன் ஆகமங்களைப் படித்து, அதில் சொல்லப்பட்ட முறையில் சிவபூசை செய்கிறான். ஆழ்ந்த பக்தியோடு, தன்னை மறந்து பூசை செய்தான். ஆயினும் சுற்றுவட்டாரமும், அதிலுள்ள பொருட்களும், அங்கு