பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 நிற்கின்ற மனிதனும் அவனுடைய மனத்தின் புறப் பகுதியிலிருந்து நீங்கவில்லை. முழுவதுமாகத் தன்னை மறந்து பூசையில் அவன் ஈடுபட்டிருப்பின் யாரோ ஒருவர், பாற் குடத்தை இடறியது அவனுக்குத் தெரியப் போவதில்லை. கிரியைகள், சடங்குகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட لاتینیه( பூசையில் ஈடுபட்டிருக்கும் ஒருவன், தன்னை மறக்க இயலாது. இன்ன கிரியைக்குப் பின் இன்ன கிரியை செய்யப்பெற வேண்டும் என்ற நினைவோடு செய்யப்பெறும் பூசை ஆதலின் முற்றிலும் தன்னை மறந்த நிலை அங்கே இருப்பதற்கில்லை. ஆனால் திண்ணனாரைப் பொறுத்தமட்டில், அவர் எந்தச் செயலைச் செய்தாலும் அந்தச் செயலின் பின்னே "அவர் இல்லை. இறைவன் கண்ணில் குருதி வரும்பொழுது கலங்கிப்போன திண்ணனார், சுற்றிச் சுற்றி வருகின்றார். ஆனால், மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் சிவகோசரியை அவர் காணவேயில்லை. தன்னை இழந்த நிலையிலேயே திண்ணனாருடைய செயல்கள் நடைபெற்றன என்பதற்குச் சிவகோசரியை அவர் காணாததே அடையாளமாகும். திண்ணனாருடையதும், விசாரசருமனதும் ஆன பூசைகள் இரண்டுமே இறைவனால் ஏற்றுக் கொள்ளப் பெற்றன என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆயினும், விசாரசருமன் பூசையில், அவன் தன்னை இழக்கவே யில்லை. திண்ணனார் செய்த ஆறு நாள் வழிபாட்டில், திண்ணார் என்ற ஒருவர் இல்லவேயில்லை. பூசை செய்யும் அந்த நேரத்தில், தன்னை மறந்து வழிபடும் அந்த நிலையை பயிற்சி மூலம் யார் வேண்டுமானாலும் பெறலாம். ஆனால், திண்ணனாரைப் போன்று, ஆறு நாளில் தான் என்ற ஒரு பொருளை அறவே துறந்துவிடுதல் வேறு யார்க்கும் இயல்வது