பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 381 ஒன்றன்று. அதனாலேயே இந்த நுணுக்கத்தை அறிந்த அடிகளார், 'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு' தம்பாலில்லை என்று வருந்துகிறார். கண்ணப்பரை ஒத்த அன்பு தம்மாட்டு இல்லை யாயினும் விசாரசருமன் பூசையையும் ஏற்றுக்கொண்ட இறைவன், தம்மையும் ஏற்றுக்கொள்வான் என்ற ஒரு துணிவு, அடிகளார்.பால் இருந்தமையின் தோணோக்கத்தில் இரண்டு வரலாறுகளையும், அவ் வரலாற்று நுணுக்கங்களோடு எடுத்துக்கூறி, அவன் புகழைப் பாடுவோமாக என்கிறார். இப்பகுதியின் உரைமாண்ட (திருவாச:328) என்று தொடங்கும் இறுதிப்பாடல் சற்று வித்தியாசமான ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றது. உரைமாண்ட என்று கூறியமையின் மனம், கற்பனை ஆகியவற்றையும் கடந்த ஒருவன் ஒளிவடிவாக வந்து உள்ளே புகுந்தான் என்றும், அவன் புகுந்தபிறகு தமக்குள் ബ நிகழ்ச்சிகள் நிகழ்ந்தனவாகவும் இப்பாடலில் அடிகளார் கூறியுள்ளார். பொறி, புலன்களை அடக்கி, அவை தொழிற்பட உதவும் மனத்தையும் அடக்கி, எல்லாவகை ஆசைகளையும் ஒருவாறு போக்கிய பின்னரே இறைவன் உள்ளே வந்து தங்குவான் என்றுதான் இதுவரை நாம் நினைந்து வந்துள்ளோம். இக்கருத்தையே பலரும் கூறிவந்துள்ளனர். திருக்கழுமல மும்மணிக்கோவையில் (4) சிந்தைப் பாழ் அறை உனக்குப் பள்ளியறை ஆக்கினன் என்று பட்டினத்துப்பிள்ளை பாடியதும் இக்கருத்தை வலியுறுத்துவதாகும். அப்படியிருக்க இம்முறைவைப்பைத் தலைகீழாக மாற்றுகிறார் அடிகளார். உரைமாண்ட ஒளி உள்ளே புகுந்ததால், ஆசைக்கடல் வற்றியது, பொறி புலன்கள்