பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அடங்கின, மனம் அவன்பால் சென்றது என்றல்லவா கூறியுள்ளார் ஏனையோர் பூசையிலும் திண்ணனார் பூசை மாறுபட் டிருந்தது. அதேபோல ஏனையோர் அனுபவத்தினும் அடிகளாரின் அனுபவம் மாறுபட்டிருந்ததுபோலும், அதனாலேயே ஒளி உள் புகுதலுமே காமக்கடல் கடக்கப் பெற்றது என்றும், ஐம்புலப் பறவை இரிந்தோடியது என்றும், மனம் அவன்பால் சென்றது என்றும் கூறியுள்ளார். திருப்பொன்னூசல் பொன்னுரசல் என்று தலைப்பு இருத்தலாலும், பொன்னுரசல் ஆடாமோ என்று அடிகளாரே கூறுவதாலும், இந்த ஊஞ்சல் வீட்டுக்குள் கட்டப்பட்டது என்பது தேற்றம். இதிலுள்ள ஒன்பது பாடல்களில் நான்கு பாடல்கள் (329, 330, 331, 333) நாரணன், நான்முகன், தேவர்கள் ஆகியோரால் காணப்பட முடியாத ஒருவன், தமக்கும் ஏனைய மக்களுக்கும் அருள் செய்த சிறப்பைக் கூறுகின்றன. வானத்திலுள்ள ஒரு பொருள், வானத்தில் வாழ்கின்ற ஏனையோர்க்குக் காட்சி தராமல் இம்மண் ணிடை வந்து எத்தனை பணியை மேற்கொண்டது? குதிரைச் சேவகனாக வந்ததும், வந்தியம்மையின் பிட்டை வாங்கி உண்டதும், கடலில் இறங்கி வலை வீசியதும் அதே பொருள்தான். இவற்றையல்லாமல் தனித்து நின்ற தமக்கு அருள் பாலித்ததை நினைக்கும்தோறும், அடிகளாருக்கு ஆனந்தம் மேலிடுகிறது. எனவே, அந்த வரைக்குடுமியின் (சிவனின்) எளிவந்த தன்மையை ஊஞ்சலில் இருந்தபடியே பாடி ஆடுங்கள் என்கிறார். * . . .