பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 383 எளிவந்த தன்மை என்றால், அதற்கு எல்லையே இல்லை என்று நினைத்தவுடன் நெகிழ்ந்துபோகிறார் அடிகளார். நாரணனும், நான்முகனும் காணமுடியாத ஒருவன், அடியார் கூட்டத்தோடு, குருநாதர் வடிவு தாங்கிக் குருந்தமரத்து அடியில் திருப்பெருந்துறையில் இருந்தது சரி. ஆனால், அந்த வரைக்குடுமி பாண்டியனுக்குக் குதிரை விற்கும் சேவகனாகக் குதிரைமேலேறி வரவேண்டுமா? வந்திக்குத் தேவைப்பட்டது ஒரு கூலியாள்தானே? தன்னுடைய பூத கணங்களில் யாரேனும் ஒருவரை அனுப்பியே இந்த இரண்டு செயல்களையும் எளிதாகச் செய்திருக்கலாமே! அனைவரையும் அடிமை கொள்ளும் எசமானனாகிய அவன், குதிரைச் சேவகனாகவும், மண்சுமக்கும் கூலியாளாகவும் வந்தான். அதிலொன்றும் ஐயமில்லை, ஏன்- என்ற வினாவை எழுப்பிக்கொண்ட அடிகளாருக்கு, விடை எளிதாகக் கிடைத்துவிடுகிறது. தன்னால் படைக்கப்பட்ட உயிர்க்ளுக்கு இன்றியமையாத் தேவை ஏற்படும் போது, தாயிற் சிறந்த தயாவுடைய அத்தத்துவன் பிறரை அனுப்பிப் பணிகொள்ளாமல், தானே வந்து பணிசெய்தது அந்தத் தாய்த்தன்மைக்கு ஒர் எடுத்துக்காட்டாகும். தாய்த்தன்மை மேற்கொண்டவுடன் செய்யும் பணியில் உயர்வு தாழ்வு, கடினம்-எளிமை, தன் தரத்திற்குத் தக்கதுதகாதது என்ற வேறுபாடுகள் மறைந்துவிடுகின்றன. இவை அனைத்தும் மறைந்து, தாயன்புமட்டுமே தலைதுாக்கி நிற்றலின் உதிர்ந்த பிட்டைக் கிழிந்த துணியில் வாங்கி உண்ணும் அளவிற்கு நிலைமை கீழே வந்தாலும் அத்தாய் அன்பு மகிழ்ச்சியடைகிறது. அவன், குதிரைச் சேவகனாக வந்தபோது, பாண்டியனிடம் கையை நீட்டி, அவன் தந்த பரிசுப் பொருளைப் பெற்றுக்கொண்டது தாயன்பில் செய்த செயலேயாகும். -