பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 387 தொல்காப்பியர் காலத்தை அடுத்து வந்த சங்கப் பாடல்கள் காலத்திலேயே தொல்காப்பிய இலக்கணம் சில இடங்களில் மீறப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது. அகத்துறையில் தோன்றும் பாடல்கள் 'கலியே, பரிபாட்டு ஆயிரு பாங்கினும்’ (தொல். பொருள்:அக-5) என்றபடி கலிப்பாவாகவோ, பரிபாடலாகவோதான் வரவேண்டும் என்று கூறும் தொல்காப்பிய விதியை மீறித்தான் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு முதலிய நூல்கள் தோன்றலாயின. எனவே, அன்னைப்பத்தை அறிந்துகொள்ள, நாம் தொல்காப்பியத்தைத் துணைக்கு அழைக்கவேண்டிய தேவையில்லை. & இறையனுபவத்தில் மூழ்கி இருக்கின்றவரையில், அந்த இறைவனைப்பற்றித் தனியே வைத்துச் சிந்திக்கின்ற நிலை இல்லை. அவனுடைய வடிவு முதலியவற்றை எண்ணத் தொடங்கினால் எண்ணுபவர் வேறு, எண்ணப்படுபவன் வேறு என்ற இரண்டு நிலைகள் தோன்றிவிடும். அனுபவத்தில் மூழ்கியிருக்கும்போது இவ்வாறு இரண்டாக இருக்க வழியே இல்லை. அனுபவத்தில் மூழ்குகின்றவர், அனுபவம் என்ற இரண்டு நிலைகூட இல்லாமல், அனுபவம் என்ற ஒன்றுமட்டுமே இருக்கின்ற நிலையாகும் அப்படி மூழ்கியிருக்கின்றபோது மூழ்கியிருப்பவரின் தனித்தன்மை முற்றிலும் மறைந்துவிடுதலின் பாட்டு, பேச்சு என்ற எதற்கும் அங்கு இடமில்லை. பாட்டு என்ற ஒன்று தோன்றினால், பாடுபவர் ஒருபுறமும், பாடப்பட்டவர் அல்லது பாடப்பட்ட பொருள் ஒருபுறமும் நின்று, பாடுபவர், பாட்டு, பாடப்படுபொருள் என்ற மூன்று நிலை தோன்றிவிடும். . . . . . .