பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 உண்ணின்று உருக்குவர் (339), சித்தத்திருப்பவர் (340) மன்னுவது என் நெஞ்சில் (343) உள்ளம் கவர்வர் (344) எம்மை ஆள்பவர் (345) என்ற முறையில் அன்னைப்பத்தின் ஐந்து இடங்களில் அவன் தம்மை விட்டு நீங்காமல் இருக்கின்றான் என்பதை அறிவுறுத்தினார். ஆனாலும், ஒரு நிலையில் காட்சி தந்தவன் வெளியேறி, மற்றொரு காட்சி கிடைப்பதற்கு இடையே உள்ள இடைவெளியில் அவருடைய உள்ளம் வருத்தத்தை அடைகிறது. அந்த வருத்தம் பெரிதாக வளர்கின்ற முறையை என்னுள்ளம் வாடும் (34) என்றும், போதலும் என்னுள்ளம் நையும்'(94) என்றும் வரிசைப்படுத்திக் கூறினார். தொடக்க நிலை வாடுதல், துயரம் பெருவளர்ச்சியுற்ற நிலை நைதல் ஆகும். வாடுகின்ற உள்ளம் பழைய நிலைக்கு வரல்கூடும். ஆனால், நைந்துபோன உள்ளம் பழைய நிலைக்கு மீளுதல் ஏறத்தாழ இயலாத காரியம். இந்த நிலையில்தான் அன்னைப்பத்தின் நிறைவுப் பாடல் வெளிப்படுகின்றது. அதில் காட்சியளிப்பவன் வடிவம் விளக்கமாகப் பேசப்பெறுகிறது. இப்பொழுது அப்பாடற்பகுதியை மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வருவோம். கொன்றை, மதியமும், கூவிளம், மத்தமும் துன்றிய சென்னியனாய்க் காட்சி தருகிறான். இதில், மேல் ஒன்பது பாட்டுக்களில் கூறப்பெற்ற எந்த அடையாளமும் கூறப்பெறவில்லை. அடிகளாரின் உள்ளமோ நைந்த நிலையில் உள்ளது. இந்த நைந்த நிலையைச் சரிப்படுத்த உதவிபுரியும் எந்த வடிவத்தையும் மேற்கொள்ளாமல், ஊமத்தம் பூவை அணிந்த அவனது திருமுடி காட்சி தருகிறது. சொல்லப்போனால் கொன்றை, மதியம், கூவிளம், மத்தம் ஆகியவற்றை அணிந்த திருமுடியின் மேற்பகுதி மட்டுமே காட்சி தருகிறது. ஒருவேளை திருமுடி முதலில் தோன்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து உமையொரு பாகனாகக்கூடக் காட்சி தந்திருக்கலாம். ஆனால், அதுவரை காத்திருக்கும் உளநிலை அடிகளாரின் நைந்த