பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 401 மருத நிலம் சூழ்ந்த திருப்பெருந்துறையைச் சுற்றிப் பார்க்கிறார் அடிகளார். சுற்றியுள்ள நன்செய் நிலங்களில் சேற்றிதழ்க் கமலங்கள் மலர்ந்துள்ளன. எனவே, சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை” (திருவாச. 368) என்று பாடுகின்றார். கமலங்களைப் பாடத் தொடங்கிய இவர், அதனுடைய வேர்ப்பாகம் அழுந்தி யிருக்கும் சேற்றுப் பகுதியை ஏன் பாடவேண்டும்? மிக ஆழ்ந்த கருத்தொன்று இதனுள் அடங்கியுள்ளது. கண்டது தாமரையைத்தான். அது ஒரு சங்கிலித் தொடர்போன்ற எண்ணத்திற்கு அடித்தளமாக அமைந்து விட்டது. மலர்ந்த அத்தாமரை இறைவனுடைய முகம், கை, திருவடி என்பவற்றை நினைவூட்டியது. அத்திருவடி நினைவு வந்தவுடன் தம்முடைய பிறப்பை அறுத்து முன்னேற்றத்திற்கு வழிகாட்டிய செயல் நினைவுக்கு வருகின்றது. இப்பொழுது அவர் திருவடி தீட்சை பெற்று மனித வாழ்க்கையின் உச்சநிலையிைல் நின்றாலும், தம்முடைய வாழ்வின் தொடக்கம் ஏனையோர் போல ஆசாபாசம், குழப்பம், விருப்பு, வெறுப்பு ஆகிய சேற்றில்தான் ஆரம்பித்தது என்பதும் நினைவுக்கு வருகிறது. இத்தனைக்கும் வடிவு கொடுக்கும் வகையில் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்’ என்று மூன்றே சொற்களில் தம் வாழ்வு அனுபவம் முழுவதையும் உள்ளடக்கிப் பாடிவிடுகிறார். கமலம் போன்ற முகம், கை, திருவடி ஆகியவற்றைப் பெற்றுள்ள குருநாதரின் மூலாதாரமாம் பரம்பொருளை அத்தாமரையே நினைக்கத் துண்டியது. பல பாடல்களில் அந்த மூலப்பொருளின் இயல்புகளை விரிவாகப் பாடுகிறார். - எல்லா உயிர்கட்கும் அவனே மூலதனம் என்ற கருத்தில் வாழ்முதலாகிய பொருளே’ (368) என்றார். இனி, "யாவரும் அறிவரியாய்'(370) என்றும், சிந்தனைக்கும் அரியாய் (372) என்றும், பூதங்கள்தோறும் நின்றாய் எனின்