பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அல்லால் போக்கு இலன் வரவு இலன் என நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரை (372) என்றும் அது பழச் சுவையென அமுது என அறிதற்கு அரிது என அமரரும் அறியார் (374) என்றும், 'முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய், மூவரும் அறிகிலர் (375) என்றும், 'விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே (370) என்றும் பாடிய முறையில் இறையனுபவத்தில் தோய்ந்த எந்த ஞானியரும் பாடாத அளவிற்கு இறை இலக்கணைத்தை அற்புதமாகப் பாடியுள்ளார். இத்தோடு நிறுத்தியிருப்பின் அடிகளாரும், ஏனைய் பெரியவர்களைப்போல இறைவன் பெருமையைப் பாடியுள்ளார் என்று சொல்லுமளவில் நின்றுவிடும். ஆனால், திருப்பெருந்துறையில் இறையனுபவத்தில் மூழ்கடிக்கப்பட்ட அடிகளார். இதனோடு விட்டுவிடுவாரா? ஒவ்வொரு முறையும் இறைவனுடைய இறப்ப உயர்ந்த சிறப்பைக் கூறும்பொழுதே, அவனுடைய எளிவந்த தன்மையையும் சேர்த்தே கிறுவது அடிகளாரின் தனிச்சிறப்பாகும். 'எமை (அடிமையாக) உடையாய்” (868) என்றும், அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலைகடலே'(369) என்றும், "அரிவரியாய் எமக்கு எளியாய்” (370) என்றும், ‘என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் (37) என்றும், எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள் புரியும் எம்பெருமான் (3.72) என்றும், இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெருமான் (373) என்றும், எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் (374) என்றும், அடியார் பழங் குடில்தொறும் எழுந்தருளிய பரனே அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்” (375) என்றும், விரும்பு அடியார் எண்ணகத்தாய் (370) என்றும், "அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்” (377) என்றும் பத்துப்