பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இதுவரையில் கூறப்பட்டவர்கள் அனைவருமே தங்களின் வேறான ஒரு பொருளைக் கையிலேந்தி இறைவனின் திருமுன்னர் நிற்கின்றார்கள். இவர்களிலிருந்து வேறுபட்ட ஒரு சிலரும் அதே கூட்டத்தில் இறைவனின் திருமுன்னர் நிற்கின்றனர். அவர்கள் எதையும் கொண்டுவரவில்லை. வாய் திறந்து ஒரு பாடலையும் பாடவில்லை. என்றாலும், அவர்களில் சிலர் தொழுகின்றனர்; இலர் அழுகின்றனர்; சிலர் துவள்கின்றனர்; சிலர் சென்னியில் அஞ்சலி கூப்புகின்றனர். உணர்வு காரணமாக இவர்கள்பால் தொழுதல், அழுதல், துவள்தல், கைகூப்புதல் ஆகிய செயல்கள் நிகழ்கின்றனவே தவிர, ஏனையோர்போல இவர்கள் புறச்செயல்கள் அமையவில்லை. இத்திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களில் 375ஆவது பாடல் இதுவரையில் நம் சிந்தனையில் இடம்பெறாத ஒரு கருத்தை வெளியிடுகிறது. அடிகளார் வரலாறு வெறும் கற்பனை அளவில், திருவிளையாடல் புராணங்களிலும் திருவாதவூரடிகள் புராணத்திலும் பேசப்பெற்றுள்ளது. ஆதலால், இவை தம்முள் மாறுபட்டு முரணி நிற்கின்றன. திருப்பெருந்துறையில் குருநாதர் வடிவாக அடியார் புடைசூழ இறைவன் இருந்தான் என்பது திருவாசகத்தில் பல இடங்களிலும் பேசப்பெற்ற ஒன்றாகும். ஆனால், அங்கே ஒரு கோயில் இருந்தது என்பதற்கு எவ்விதச் சான்றுமில்லை. குதிரை வாங்கத் தாம் கொண்டு சென்ற பணம் முழுவதையும் அடிகளார் கோயில் கட்டப் பயன்படுத்தினார் என்று புராணம் பேசுகிறது. இதுதவிர வேறு ஆதாரங்கள் இல்லை. திருப்பெருந்துறைக் கோயிலை யார் கட்டியிருப்பினும் அது அடிகளாரின் நிகழ்ச்சியின் பின்னரே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கவும் இ.முண்டு. இதற்கு ஒரு காரணமுண்டு. தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும்