பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 405 கோயில்கள் எதிலும் சிவலிங்கப் பிரதிட்டை இல்லாத கோயிலே இல்லை. அப்படியிருக்க, திருப்பெருந்துறைக் கோயில்மட்டும் கருவறையில் இலிங்கம் இல்லாமல் வெறும் பீடம் மட்டும் இருந்துவருகிறது. அடிகளாருக்கு அருள் செய்த குருநாதர் சீடர்களோடு மறைந்துவிட்டார் என்பதை அறிகிறோம். அதனால் அந்த நிகழ்ச்சியை உட்கொண்டு இக்கோயில் அமைப்பில் இலிங்கம் இல்லாமல் பீடம் மட்டும் அமைந்திருப்பது பொருத்தமேயாகும். அப்படியானால், செம்தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி’ (திருவாச:375) என்று அடிகளார் பாடுவதன் நோக்க மென்ன? அடிகளாருக்கு அருள்செய்த குருநாதர், மானிட உருவில் இருந்தாரேனும் செந்தழல் போன்ற நிறம், உரு, வடிவு பெற்றிருந்தார் என்பதில் தவறில்லை. வெறும் செந்தழலாக இருந்திருப்பின் உறைதிரு மேனியும் காட்டி’ என்று பாடியிருக்க மாட்டார். மானிட வடிவுடன் இருந்த குருநாதரின் உடலிலிருந்து ஒளி தோன்றி, அது மேல் நோக்கியதாக இருந்திருத்தல் வேண்டும். அதனாலேயே ‘செந்தழல் புரை திரு மேனி என்றார். இங்கு வந்துள்ள "மேனி' என்ற சொல் நினைவிற் கொள்ளவேண்டியதாகும். பிற கோயில்களில் காணப்பெறும் இலிங்க வடிவிலிருந்து பெரிதும் வேறுபட்டதாகலின் ‘செந்தழல் புரைதிரு மேனி’ என்றார். அடுத்த அடியாகிய 'திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி’ என்பது நன்கு விளங்குமாறில்லை. இந்த அடியில் வரும் உறை கோயில் என்பதுதான் பிரச்சினைக்குரிய தொடராகும். உறை கோயில் என்பது வினைத் தொகையாகும். செந்தழல் திருமேனி உடையான் உறைந்த, உறைகின்ற, எக்காலத்தும் உறையப்போகின்ற கோயில் என்ற பொருளைத் தந்துநிற்பதாகும் அவ்வினைத் தொகை, செந்தழல் புாை திருமேனி என்றதால் தழலை