பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஒத்த மேனி என்றார். தழலைக் காணலாமேனும் அதற்கெனத் தனிவடிவம் இல்லை. அதேபோலக் குருநாதர் கண்ணால் காணப்பெற்றாலும் அவருக்கென்று தனிவடிவம் எதுவுமில்லை ஆகவேதான், திருப்பெருந்துறைக் கோயிலிலும் தனியாக ஒரு வடிவம் வைக்கப்படவில்லை. செந்தழல் புரையும் அவன் திருமேனி என்று அடிகளார் கூறினாலும், அவன் திருப்பெருந்துறைக் கோயிலிலுள் உறைகின்றான் என்று பாடியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்வதானால் தழல்போன்ற வடிவுடைய பெருமான் உறைகின்ற இடம் திருப்பெருந்துறைக் கோயில் என்பது விளங்குகின்றது. இந்த அடிப்படையை வைத்துக் கொண்டு பேசுவதானால், அடிகளார். நிகழ்ச்சிக்கு முன்னரே, திருப்பெருந்துறையில் ஒரு கோயில் இருந்தது என்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆனால், இதே பாடலில் மூன்று இடங்களில் காட்டி’ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். செந்தழல் மேனி காட்டி, அந்தணன் ஆவதும் காட்டி, உறை கோயில் காட்டி என்று வருவதை மீண்டும் ஒருமுறை சிந்தித்தால் இவை மூன்றுமே அடிகளார் காண்பதற்காக அந்த விநாடியில் உருவாக்கப் பெற்றவையோ என்று ஐயுறத் தோன்றுகிறது. திருமேனி ஒன்று அல்லாமல் எல்லாத் திருமேனிகளையும் உடைய அவன், இந்த விநாடியில் செந்தழல் புரை திருமேனியைக் கொண்டான். எத்தனையோ மானிட வடிவிருக்க, அந்தண வடிவைக் கொண்டான். அடிகளார் காண்பதற்காகவே மேனியும், அந்தணவடிவும் காட்டியவன் ஒரு திருக்கோயிலையும் காட்டினான் போலும். குருநாதராக வந்தவர் திருப்பெருந்துறையைப் பொறுத்தமட்டில் இங்குத்தான் உறைகின்றேன் என்று சொல்லி ஒரு கோயிலைக் காட்டினார்போலும், மேனியும், அந்தண வடிவும் மறைந்ததுபோல அந்தக் கோயிலும் மறைந்திருக்க வேண்டும். எனவேதான், உறைகோயில்