பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 407 என்று வினைத்தொகையைப் பயன்படுத்தினார் போலும். எதிர்காலத்தில் உறையப்போகும் கோயில் என்று பொருள் கொண்டால் ஒருவாறு இப்பிரச்சினையைக் சமாளிக்கலாம். கோயில் மூத்த திருப்பதிகம் நீத்தல் விண்ணப்பத்தில் ‘என்னை விட்டுவிடாதே’ என்று நாற்பத்தெட்டுப் பாடல்களில் பேசிய அடிகளார், மனத்தில் ஏதோ ஒரு தென்பு பிறக்க, அதன் விளைவாக இரண்டு பாடல்களில் (52, 153 விட்டுவிடாதே என்று கெஞ்சுவதற்குப் பதிலாக, இறைவனை எச்சரிக்கை செய்கின்றார். இதிலுள்ள ஐம்பது பாடல்களில் மனத்தில் தோன்றிய துயரம் உள்ளத்தைச் சென்று தாக்க, ஆறாத் துயரத்தில் அழுந்தி, எக்காரணங்கொண்டும் தம்மை விட்டு விடக்கூடாது என்று தொடங்கும் இப்பாடல்கள் சொல்லச் சொல்ல துயரம் மிகுதிப்படுதலைக் காட்டுகின்றன. நீத்தல் விண்ணப்பத்தின் முதல் நாற்பது பாடல்களில் அவருடைய மனத்தில் தோன்றிய இந்த ஆதங்கம் நம்பிக்கையை இழந்த நிலையை (despair) அடைந்து விடுகிறது. என்றாலும் அடுத்துள்ள ஏழு பாடல்கள் முடிவதற்குள் இந்த நம்பிக்கை இழந்த நிலை மாறி, புதிய தென்பு பிறந்து, விடமாட்டான் என்ற உறுதிப்பாடு மனத்துள் தோன்ற, அதன் 48, 49ஆம் பாடல்களில் அவனையே கேலிசெய்யும் நிலை தோன்றிவிட்டது. எச்சரிக்கை செய்தாலும் தம் முன்னைய நிலையை உணர்ந்து 50ஆவது பாடலில், தாம் கேலி செய்தது தவறாக இருப்பினும் அதனை மன்னிக்க வேண்டும் என்று பழைய முறையில் வேண்டிக்கொள்கிறார். இத்தகைய நிலைமை கோயில் மூத்த திருப்பதிகம் வரையுள்ள 377 பாடல்களில் நீத்தல் விண்ணப்பம் தவிர வேறெங்கும் காணமுடியாது. நீத்தல் விண்ணப்பம் திருப்பெருந்துறையில் அருளியதாகும். குருநாதர்