பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 மறைந்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சியில் தோன்றிய பாடல்களாகும், இவ்விண்ணப்பம். இவை தவிரச் சதகம் உள்பட பின்வரும் பாடல்களில் இத்தகைய நம்பிக்கை இழந்த நிலையைக் காண்பது இயலாத காரியம். காரணம், அவருடைய உள்ளத்தில் தோன்றிய தென்பு, நம்பிக்கை இழந்த நிலைக்கு அவரைத் தள்ளவில்லை. தில்லையைப்பற்றிப் பாடப்பெற்றுள்ள கோயில் மூத்த திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களில் ஒரு வகை வளர்ச்சியைக் காணலாம். உடையாள் என்று தொடங்கும் முதல்பாடல் இறையிலக்கணத்தினர் ஒரு பகுதியையும், அடிகளாருக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பையும் தத்துவ ரீதியாக எடுத்துக் கூறத் தொடங்குகிறது. ஆனால், இரண்டாவது, மூன்றாவது பாடல்களிலேயே இந்தத் தத்துவ ஆராய்ச்சி அடிபட்டுப் போய், அடிகளாருக்கே உரிய உணர்ச்சி கொப்பளிக்கும் பாடல்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. தத்துவ ஆராய்ச்சியில் தொடங்கிய முதல்பாடல் உள்ளத்து உணர்ச்சியாய் வளர்ந்து, தாம் எதிர்பார்த்த அனுபவம் கிட்டாமையால் மனம் நொந்து போன அடிகளார், நல்காது ஒழியான் எனத் தொடங்கும் பத்தாவது பாடலில் உள்ளக் குமுறலை வெளியிடுகிறார். இந்தக் குமுறலின் இடையே நல்காது விடமாட்டான் என்ற சிறுநம்பிக்கையும் தலைகாட்டு கின்றது. இந்நிலைக்கு முற்றும் மாறாகக் கோயில் மூத்த திருப்பதிகம் நம்பிக்கை இழக்கும் மனநிலையில் தொடங்குகிறது. அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் என்று சாதாரணமாக வேண்டிக்கொண்டு முதற்பாட்டைத் (388) தொடங்கியவர், அடுத்த பாடலில் அவ்வாறு அருள்செய்வதற்கு அவன் கடமைப்பட்டவன் என்பதை நினைவூட்டுகிறார். "எனை முன்னின்று ஆண்டாய்; யானும் அதுவே முயல்வுற்றும் பின்னின்று