பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 பின்னுரை 409 ஏவல் செய்கின்றேன்’ என்று சொல்லிக் கொண்டு வந்தவர், தாம் செய்யும் குற்றேவலில் ஏதோ ஒரு பிழை நேர்ந்துவிட்டதாகவும், அது காரணமாக அடியார்கள் உடன்செல்லாது பிற்பட்டு ஒழிந்ததாகவும் கூறினார். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், தாம் எவ்வித முயற்சியும் செய்யாமல் இருக்கவும் திருப்பெருந்துறையில் (குருநாதர்) அவராகவே வந்து, முன்னின்று தடுத்து ஆட்கொண்டார் என்பதாகும். அவராகவே ஆட்கொண்டு இருப்பினும் அதனை எளிதாக ஒதுக்கிவிடாமல் தாம் குருநாதர் சொன்ன வழியே சென்றதாகவும் கூறுகிறார். “யானும் அதுவே முயல்வுற்றுப் பின்னின்று ஏவல் செய்கின்றேன் (379) என்று நிகழ்காலத்தால் கூறியதன் பொருள் இதுவேயாகும். குருநாதர் காட்டிய வழியிலேயே செல்லத் தொடங்கி முயல்வுற்று, அவர் மறைந்துவிட்ட பிறகும் (பின்னின்று), அவ்வழியிலேயே செல்வதாகக் (ஏவல் செய்கின்றேன்) கூறுகிறார். அப்படிப்பட்ட ஒருவரை வழிநடத்திச் சென்று ஏற்றுக்கொள்வதுதானே முன்னின்று ஆண்டவனுக்குரிய கடமை? அதனை அவர் செய்ய வில்லை என்பதை எல்லையற்ற மனவருத்தத்துடன் குறிப்பாகக் கூறுகிறார். 'பிற்பட்டு ஒழிந்தேன்’ என வரும் தொடர் இருவகைப் பொருளை உடையது. முன்னேறிச் செல்லாமல் பிற்பட்டு ஒழிந்தது தம்முடைய குற்றம் என்று அடிகளார் ஏற்றுக்கொள்வதுபோல இத்தொடர் அமைந்துள்ளது. ஆழ்ந்து நோக்கினால் முன்னின்று ஆண்டவன், தன்னால் ஆட்கொள்ளப்பட்டவன் எவ்வளவு பின்தங்கினாலும் அவனை இழுத்து முன்னேற்ற வேண்டியது அவன் கடமையாகும் என்ற பொருள் இரண்டாவதாக நிற்கின்றது. இப்பொழுது இரண்டும் நடைபெறவில்லை. அதாவது முன்னேறவேண்டிய அடிகளார், தம்முடைய அறியாமை காரணமாகப் பிற்பட்டு ஒழிந்ததாக கூறுகிறார். ஆண்டவன்