பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 பின்தங்கிய இவரை இழுத்து முன்னேற்றாமல் விட்டுவிட்டான் என்றும் கூறுகிறார். இாண்டு வகையிலும் துன்பம் அடைந்தவர் அடிகளாரே ஆவார். ஆதலால், நம்பிக்கை இழப்பு முழுவதுமாக அடிகளாரை ஆட்கொண்டுவிட்டது. இதனை 380ஆம் பாடலில் (3வது பாடல்) ‘அடியேற்கு உன் முகந்தான் தாராவிடின் முடிவேன்' என்று புலப்படுத்திப் பாடுகின்றார். இறந்துபடுவேன் முடிவேன் என்று கூறினாரேனும் gi{ நடைபெறுகின்றவரையில் தாம் என்ன/3ے செய்யப்போகிறார் என்பதை இரங்கும் கொல்லோ என்று அழும் அதுவே அன்றி மற்று என் செய்கேன் (38) என்று பாடுகிறார். நம்பிக்கை இழப்பு என்பது 379ஆம் பாடல் தொடங்கி 381ஆம் பாடல் வரையுள்ள மூன்று பாடல்களில் ஒரு முழுவடிவு பெற்றுவிடுகிறது. நீத்தல் விண்ணப்பத்தில் நாற்பது பாடல்களுக்கும் மேலாக மெள்ளமெள்ள வளர்ந்த இந்த நம்பிக்கை இழப்பு கோயில் மூத்த திருப்பதிகத்தில் மூன்றே பாடல்களில் முழுவடிவு பெற்றுவிடுகிறது. மனித மனம் மிக வினோதமானது. நம்பிக்கை இழப்பு முழுவதுமாக நேர்ந்துவிட்டாலும், ஏதாவதொன்றைப் பற்றிக்கொண்டு அந்த நம்பிக்கையை வளர்க்க முயல்வது மனித மனத்தின் இயல்பாகும். அறுந்துகொண்டிருக்கும் வேரைப் பற்றிக்கொண்டு தொங்குகின்றவன், தனது இறுதிக்காலம் சில விநாடிகளிலேயே வரப்போகிறது என்று அறிந்தவுடன், நம்பிக்கை இழப்பை முழுவதுமாக அடைந்து விடுகிறான். என்றாலும், மரத்திலிருந்து சொட்டுகின்ற தேனை நாக்கை நீட்டிப் பெற்று அனுபவிப்பது நம்பிக்கை இழப்பின் இடையே தோன்றும் ஒரு நம்பிக்கையாகும். அடிகளாருக்கும் இத்தகைய ஒருநிலை எற்பட்டதை 382ஆம் பாடல் தெரிவிக்கின்றது. 'பிரைசேர் பாலின்