பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஏசுவார்கள் என்று பொதுவாகக் கூறினாரேனும், யாரை ஏசுவார்கள் என்ற வினாவிற்கு விடை கூறுமுகமாக, அடுத்த பாடலில் 'என்னை உனக்கு அடியான் என்று பிறரெல்லாம் பேசாநிற்பர் என்று கூறுகிறார். இந்தத் தொடரை வைத்துக்கொண்டு பார்த்தால், பேசா நிற்பர்' என்பதற்கும் (382) ஏசாரோ (183) என்பதற்கும் அதிக வேறுபாடில்லை என்பது விளங்கும். 'குருநாதர் இட்ட பணியைத் தலைமேற்கொண்டு வாழும் திருவாதவூரரை இன்னும் அந்தக் குருநாதர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று உன்னை ஏசுவார்கள். அடுத்தபடியாக 'அப்படி ஏற்றுக்கொள்ளாத ஒரு குருநாதரை, எங்கே தேடிப்பிடித்து இந்தத் திருவாதவூர் அவருக்கு அடியார் ஆயினார்’ என்று என்னை ஏசுவார்கள். 'பிறர் நின்னை ஏசினாலும், என்னை ரசினாலும் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், யான் நின் அடியே பேணும் அடியவனாகவே இருப்பேன்’ என்று அடிகளாரின் கூற்றில், நம்பிக்கை இழப்பின் இடையே ஒரு உறுதிப்பாடு தொனித்தலைக் காண்கின்றோம். 384ஆம் பாடலில் நம்பிக்கை இழப்பு ஒரு புதிய வடிவத்தைப் பெறுகிறது. எஜமான் இல்லாத மாடுபோல் நான் திரிய வேண்டுமோ?’ என்று கேட்கும்பொழுதே எஜமான் இல்லாத குற்றம் மாட்டைச் சேர்ந்ததன்று; மாட்டின் சொந்தக்காரனையே அக்குற்றம் சென்று சேரும் என்ற பொருள் தொனிக்க, ‘என்னை இப்படி நிர்க்கதியாய் விட்ட குற்றம் உன்னையே சேரும்’ என நேரடியாகக் கூறாமல் உவமையின் மூலமாகவே இப்பொருளைப் பெறவைத்துவிடுகிறார். 385ஆம் பாடல் மறுபடியும் நம்பிக்கை இழப்பின் எல்லையைத் தொடுகிறது. ஆட்கொண்ட நீ அருளவில்லை