பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 413 என்றால், என்னை அஞ்சேல் என்று சொல்வார் யார்? என்று நொந்து கூறிவிட்டு, ‘என்னையும் ஒரு பொருளாக மதித்துத்தானே நீ ஆட்கொண்டாய்?’ என்ற பொருளில் பொருளா எனைப் புகுந்து ஆண்ட பொன்னே' என்கிறார். இந்த அளவு நடைபெற்றுவிட்ட பிறகு, என்னை மீட்டும் நின் அடியாராகிய அருளுடையார் கூட்டத்தில் சேர்க்காமல் இருந்துவிட்டால், இப்படியே நான் வாழ்ந்து இறந்து விட்டால், உலகத்தார் சிரிக்கமாட்டார்களா? "சாதாரண மனிதனாகிய நான் ஏனைய மனிதர்களைப்போலச் செத்தால், பிறர் சிரிப்பதற்கு அதில் ஒன்றுமில்லை. ஆனால், பொருளாய் எனைப் புகுந்து ஆண்ட நீ இப்பொழுது சும்மா இருந்துவிட்டால் அதன் விளைவாக, ஏனையோர் போல நானும் செத்துவிட்டால் உலகத்தார் உன்னைப் பார்த்துத்தான் சிரிப்பார்கள், என்பது நம்பிக்கை இழப்பின் முடிமணி. "தெருளார் கூட்டம்' என்று 385ஆம் பாடலில் கூறியவர், அவர்கள் யார் என்பதைச் சிரிப்பார் களிப்பார்’ (386) என்ற அடுத்த பாடலில் விளக்குகிறார். இப்பகுதியின் நிறைவுப்பாடல் நம்பிக்கை இழந்த அடிகளார் உள்ளத்தில் தோன்றிய ஒரு புதிய கருத்தாகும். என்றாவது ஒருநாள் அவன் தமக்கு அருள்செய்யாமல் இருக்கப் போவதில்லை என்ற நினைவில், தம் வாழ்க்கை முறை எவ்வாறு செல்கின்றது என்பதை 'நாமம் பிதற்றி நயனநீர் மல்கா, வாழ்த்தா, வாய் குழறா, வணங்கா, மனத்தால் நினைந்து உருகிப் பல்கால் உன்னைப் பாவித்துப் பரவி நிற்கின்றேன்’ என்று தன்னிலை விளக்கம் கூறியவர் ஒருபடி மேலே செல்கின்றார். ‘ஐயனே! அன்று நீ என்னை ஆண்டாய் என்று உரிமை கொண்டாடி, இப்பொழுது நீ அருள வேண்டும் என்று உன்னை வேண்டவில்லை. நீ படைத்த உயிர்களில்