பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஒர் உயிர் இப்படி அவதிப்படுவதைப் பார்த்துக்கொண்டு இருப்பது உனக்கு அழகா: திருவாதவூானை உன் அடியனாக மாற்றிய உன் கடமையை நினைவூட்ட எனக்கு உரிமையில்லை. ஆனால் நீ படைத்த உயிர்களுள் ஒன்று படும் அவஸ்தை இது. ஆதலால் அந்த உயிருக்கு அருள வேண்டும்’ என்கிறார். தில்லையில் அருளிய இந்தப் பத்துப் பாடல்களில் எட்டுப் பாடல்கள் 378, 379, 381, 382, 383, 38, 385, 386) அடியார் கூட்டத்தைப் பல்வேறு சொற்களால் சுட்டுகின்றன. இதற்குரிய 25frf7 6ðar th என்ன ? திருப்பெருந்துறையில் அடியார் கூட்டத்தின் இடையே அமரச் செய்த குருநாதர், அந்த நேரத்தில் என்ன கூறினார்: கோலம் ஆர்தரு பொதுவினில் வருக' என்றுதானே கட்டளையிட்டார் ? எனவே, தில்லை சென்றவுடன் அடியார் கூட்டம் அங்கே நிறைந்திருக்கும், அவர்களிடையே தம்மை அமருமாறு செய்வார் குருநாதர் என்று அடிகளார் எண்ணியிருப்பின் அதில் தவறில்லை. இப்பொழுது தில்லை வந்தாகிவிட்டது. அடியார் கூட்டம் காணப்படவில்லை. தில்லைக் கூத்தனும் இரங்கி அருள் செய்யவில்லை. இரண்டு வகையிலும் ஏமாந்துவிட்டதை நினைந்துதான் இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன் என்றென்று ஏமாந்து இருப்பேனை’ (384) என்று பாடுகிறார். அடியார் கூட்டம் என்று இத்தனை இடங்களில் அடிகளார் குறிப்பிடுவது மனிதர்களாக வாழ்ந்துவரும் அடியார் கூட்டத்தை அன்று. திருப்பெருந்துறையில் குருநாதரோடு வந்து, அவருடனேயே மறைந்துவிட்ட அடியார் கூட்டத்தையே ஆகும். கோயில் திருப்பதிகம் மனித மனத்தின் பொதுவான இயல்புகளில் ஒரு முக்கியமான இயல்பைப்பற்றி இங்கு நினைத்தல் வேண்டும்.