பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 மனித மனத்தின் மிக ஆழத்தில் தோன்றும் 561) உணர்வுகளை, வாய்விட்டு வெளிப்படுத்தும்போது சில சங்கடங்கள் ஏற்படும். அதாவது, எதிரே யாரேனும் ஒருவரை அல்லது ஒன்றை வைத்துக்கொண்டு, எவ்வளவு பேசினாலும், யாரும் அதனைத் தவறாகக் கருதுவதில்லை. அவ்வாறில்லாமல் தாமே தனியாக நின்று இவற்றை வாய்விட்டுப் பேசினால், பேசியவரின் மனநிலையில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது என்று பலரும் நினைக்க ஏதுவாகும். இந்த அடிப்படையில்தான் அஃறிணைப் பொருட்களைத் தூது அனுப்பும் இலக்கியங்கள் தோன்றி யிருக்க வேண்டும். இக்காலத்திலும் ஐந்து மாதம் அல்லது ஆறு மாதம் ஆகும் சிறு குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு, பெரியவர்கள் அதனோடு உரையாடிக்கொண்டிருப்பதைக் காணலாம். இவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாத அக் குழவி அஃறிணைப் பொருள் களோடு வைத்து எண்ணப்பட வேண்டிய ஒன்றாகும். இதனை நன்கு புரிந்துகொண்டால் தூது இலக்கியத்தின் அடிப்படையைப் புரிந்துகொள்ள முடியும். அடிகளாரின் திருவாசகத்தில் குயில், கிளி, வண்டு என்பவை விளித்துப் பாடப்படினும் அப்பகுதியைத் துது என்று சொல்வது பொருத்தமா என்பது சிந்திப்பதற்குரியது. தூதாக ஒன்றை அனுப்பினால் அனுப்புபவர் படும் துயர மும், அதனைத் தீர்ப்பதற்கு உரியவர் வந்து தீரவேண்டிய இன்றியமையாமையும் பேசப்பெறும். சுந்தரமூர்த்தி சுவாமி களுடைய தேவாரத்திலுள்ள பறக்கும்எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள் அறக்கண் என்னத்தகும் அடிகள் ஆரூரரை மறக்ககில்லாமையும் வளைகள் நில்ல்ாமையும் உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லிர்களே (திருமுறை:7-37-2)