பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 41 என்பன போன்ற தூதுப்பாடல்கள் இப்பகுதிக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். இந்த அடிப்படையில் பார்த்தால், திருக்கோத் தும்பியில் வரும் இரண்டு பாடல்கள் (திருவாச 227, 233) தவிர ஏனையவை இந்த அடிப்படைக்குப் பொருந்து மாறில்லை. வண்டு ரீங்காரம் இடுதல் எப்பொழுது நடைபெறு கிறது? உணவு தேடிச் செல்லும்போதும், துணையை நாடிச் செல்லும்போதும் வண்டுகள் பல்வேறு சுருதிகளில் ரீங்காரம் இடுகின்றன. மலரின்மேல் அமர்ந்து தேனை உண்ணத் தொடங்கியபோதும் பெடை வண்டின் அருகில் அமர்ந்து விளையாடத் தொடங்கியபோதும் இந்த ரீங்காரம் நின்றுவிடுகிறது. எனவே, வண்டு ரீங்காரம் இடுகின்றது என்றால் உணவையோ, உறவையோ நாடிச் செல்லுகின்றது என்பது பொருளாகும். இதனை வேறு வகையாகக் கூறவேண்டுமானால் இந்த ரிங்காரத்தின் பயன் மிகச் சாதாரணமானதொன்றாகும். உணவையும் புணர்ச்சியையும் நாடி, fங்காரமிட்டு வாணாளை வீணாளாக்கும் வண்டை நோக்கி, நிலையில்லாத பொரு ளுக்காக ரீங்காரம் இடும் வண்டே! நிலையான இன்பத் தைத் தருபவனை நோக்கி ரீங்காரம் இடுவாயாக' என்ற அடிப்படையில்தான் திருக்கோத்தும்பியின் பெரும்பாலான பாடல்கள் அமைந்துள்ளன. அடிகளாருக்கு இரண்டு நூற்றாண்டுகள் முற்பட்டு வாழ்ந்த நாவரசர் பெருமான், ஊர்கள்தோறும் சென்று மக்களுடைய வாழ்க்கைமுறையைப் பார்த்து மனம் நொந்தார். உண்டு, உடுத்து, இன்பம் துய்க்கின்ற வாழ்க்கை தவிர அவர்கள் வாழ்க்கையில் குறிக்கோள் என்று எதுவும் இல்லை என்பதை உணர்ந்தார். இந்த அவல நிலையைத் தம்மேல் ஏறட்டுக்கொண்டு பாலனாய்க் கழிந்த நாளும்’