பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 திருவாசகம் சில சிந்தனைகள் - 3 (திருமுறை:4-67:9) என்று தொடங்கும் பாடலில் 'குறிக்கோள் இலாது கெட்டேன்’ என்று பாடினார். இதன்பிறகு சில காலம் கழித்து இந்த மனித சமுதாயத்திற்கு ஒரு குறிக்கோளைத் தரவேண்டும் என்ற பெருநோக்கில் மனித சமுதாயம் முழுவதையும் இங்கே வருக என்று அழைத்தார், நாவரசர் பெருமான். மனிதர்கள் ஒன்றுகூடினர் போலும். அவர்களை நோக்கிக் 'கணி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே (திருமுறை: 5-917) என்று ஒரு வினாவை எழுப்பினார். ஏதோ பெறுதற்கரிய பழத்தைத் தரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் கனியுண்ணத் தயாராக இருந்தனர். ஆனால், பாடலின் மூன்றாவது அடி புனிதன் பொற்கழல் ஈசன் என்னும் கனி' என்று வந்தவுடன் அங்கு ஒருவரும் இல்லை. காரணம், திருவடியாகிய கனியை யாரும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. நாவரசர் பெருமானின் இந்த அனுபவம் பின்னே வந்த அடிகளார் போன்றவர்களை விழிப்படையச் செய்தது போலும். அதனாலேயே மனிதர்களை விட்டுவிட்டு, வண்டு குயில் என்பவற்றை விளித்துப் பெருமானின் புகழைப் பாடுங்கள் என்று பேசுகின்றார். சென்று ஊதாய்’ என்பது அவனை நாடிச்சென்று அவன் புகழை ஊதுவாயாக (பாடுவாயாக என்ற பொருளைத் தந்து நிற்கின்றது. 215. பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த நா ஏறு செல்வியும் நாரணனும் நான்மறையும் ழா ஏறு சோதியும் வானவரும் தாம்அறியாச் சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ பூ ஏறு கோன்-பிரமன், புரந்தரன்-இந்திரன். நா ஏறு செல்வி-நாமகள். மா ஏறு சோதி-உருத்திரன். சே-இடபம். கோத்தும்பீ-அரசவண்டே.